மனைவிக்கு உங்களை விட சம்பளம் அதிகமா..?  ஆண்களுக்கு நேரிடும் நிலை இதுதான்...!

 
Published : May 15, 2018, 04:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
மனைவிக்கு உங்களை விட சம்பளம் அதிகமா..?  ஆண்களுக்கு நேரிடும் நிலை இதுதான்...!

சுருக்கம்

wife earning more than husband means what is his reaction you know?

மனைவிக்கு உங்களை விட சம்பளம் அதிகமா..?  ஆண்களுக்கு நேரிடும் நிலை இதுதான்...!

முன் ஒரு காலத்தில் எந்த ஒரு வீட்டிலும் ஆண் மகன்கள் மட்டுமே வெளியில் வேலைக்கு செல்வார்கள் பெண்கள் பொதுவாகவே வீட்டிலேயே இருப்பார்கள்.

ஆனால் இப்போது நிலவும் சூழ் நிலைக்கு ஏற்ப, கணவன் மற்றும் மனைவி  இருவருமே வேளைக்கு செல்ல தொடங்கி விட்டனர்.

சொல்லப்போனால் இருவருமே வேளைக்கு சென்றால் தான் அவர்களால்   குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இருவரும் சம்பாதித்து நல்ல முறையில் குடும்பம் சென்று கொண்டிருக்கும் போதுதான், வெளியில் உள்ள நபர்கள் கணவர் மனம் புண்படும்படி பேசி குழப்பத்தை ஏற்படுத்தி விடுவார்கள்..

அதாவது,....உன்னை விட உன் பொண்டாட்டி அதிகமாக சம்பாதிக்கிறார்...

உங்களுக்கு வேலை இல்லை என்றாலும் பரவாயில்லை..உங்க மனைவி  இருக்காங்க...இது போன்று பேசுவதால், நல்லா இருந்த குடும்பத்தில் கும்மி அடிக்க தொடங்கி விடுவார்கள்...

சரி வாங்க தன்னை விட தன் மனைவி அதிகமாக சம்பாதித்தால் கணவன் மார்கள் எது போன்ற ஒரு நிலையை அடைவார்கள் என்பதை பார்க்கலாம்.

அதிகாரம்

வரவு செலவு முதல் என்ன செய்ய வேண்டும்....என்ன செய்ய கூடாது என்பதை நிர்ணயிக்கும் அதிகாரம் மனைவிக்கு சென்று விடுமோ என்ற பயம் வரும்.

தன் பேச்சை கேட்க மாட்டாங்களோ..

மனைவி தன்னை விட அதிகமாக சம்பாதித்தால், தன் பேச்சை மதிக்காமல் நடந்துக்கொள்வாரோ என்ற பயம் கணவருக்கு உண்டு

அக்கம் பக்கத்தினர்

மனைவி அதிகமாக சம்பாதிக்கிறார் என்ற செய்தி அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்தால் ஏதோ ஒரு சந்தர்பத்தில் கிண்டலாக பேச வேண்டிய கட்டாயம்   ஏற்படும் என ஒருவிதமான பயம் இருக்கும்

சந்தேகம்

எப்போதும் வேலை வேலை என ஆர்வம் காட்டி, அதிக சம்பளம் பெரும் மனைவி மீது கண்டிப்பாக சந்தேகம் வர வாய்ப்புகள் அதிகம்...எந்த அளவிற்கு பாசம் வைத்து இருந்தாரோ அதை விட அதிக சம்பளம் காரணமாக சந்தேகம் அதிகரிக்க  வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

உதவி

ஒரு சில கணவர் மார்கள் தன் மனைவி அதிகமாக சம்பாதிப்பதை மிகவும்  பெருமையாக எடுத்துக்கொள்வார்கள்.

மேலும் மனைவி சம்பாதிப்பதால் குடும்பம் நடத்த பேருதவியாக இருக்கிறது எனவும் நல்ல முறையில் எடுத்துக் கொள்வார்கள்.

எதிர்காலம்

மேலும் மனைவி அதிகமாக சம்பாதித்தால், கணவர் சம்பாதிக்கும் பணத்தை   குடும்பத்தை நிர்வகிக்கவும், மனைவி சம்பாதிக்கும் பணத்தில் எதிர்கால   நலனுக்கு சேர்த்து வைக்க  உதவியாக இருக்கும் என கூறுகின்றனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்