சொட்டை தலையில் கூட "முடி" வளர வேண்டுமா..?  வெங்காயத்தை இப்படி தான் பயன்படுத்த வேண்டுமாம்...

 
Published : May 14, 2018, 07:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
சொட்டை தலையில் கூட "முடி" வளர வேண்டுமா..?  வெங்காயத்தை இப்படி தான் பயன்படுத்த வேண்டுமாம்...

சுருக்கம்

if we use the onion in this way sure the hair will grow in baldness

சொட்டை தலையில் கூட முடி வளர வேண்டுமா..?  வெங்காயத்தை இப்படி தான் பயன்படுத்த வேண்டுமாம்...

தற்போதைய கால கட்டத்தில் முடி உதிர்தல் அதிகமாக இருக்கிறது அதற்கு பல காரணங்கள கூறினாலும், நம்முடைய வாழ்க்கை முறை முற்றிலும் மாறி விட்டது என்றுதான் கூற வேண்டும்...

நாம் உண்ணும் உணவு, வேலை பளு, தூக்கம், தண்ணீர் என அனைத்து காரணியையும்  சொல்லலாம்

இது போன்று பல காரணிகளால் முடி உதிர்தல் பெரும் சவாலாக இருந்தாலும், முடியை வலுப்படுத்தவும்,நீளமாக வளரவும் சில வழி முறைகள் உள்ளன

அது என்னவென்று பார்க்கலாமா..?

வெங்காயத்தை உணவில் சேர்த்தாலே தனி சுவை கிடைக்கும் அல்லவா..?

காரணம் வெங்காயத்திற்கு அத்தனை சிறப்புகள் உள்ளது என்பது தான் உண்மை

வெங்காயத்தை பொறுத்தவரையில்,நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சையை எதிர்த்து போராடும் தன்மை அதிகமாக உள்ளது என்றே கூறலாம்.

இதனால் முடி கொட்டுவது தடுக்கப்படுகிறது

மேலும் முடியின் வேர்க்கால்களுக்கு தேவையான் ஊட்டச்சத்தை தந்து  முடி உதிர்வதில் இருந்து பாதுகாக்கிறது.

மேலும் வேங்காயத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் இளநரையை வர விடாமல் தடுக்கிறது.

தொடர்ந்து வெங்காயத்தை பயன்படுத்தி வந்தால், முடிக்கு பளபளப்பு அதிகமாக    கிடைக்கும்

மேலும் தலை மற்றும் கழுத்துப்பகுதியில் வரும் புற்றுநோயை வராமல் தடுக்கிறது.

முடி வளர்ச்சிக்கு அதிகம் உதவும். பொடுகு தொல்லையும் வராது.

சரி வெங்காயத்தை எப்படி எல்லாம்  பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்

தயாரிப்பது எப்படி ?

வெங்காயத்தை மிச்சியில் போட்டு நன்கு அரிது அதன் சாற்றை மட்டும் ஒரு துணை கொண்டு தனியாக பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்

வெங்காய சாற்றை தலையில், நன்கு தேய்த்து தலை முழுக்க பரவவிட்டு பின்னர்  ஒரு மணி நேரம் அப்படியே விடவும்..பின்னர் ஷாம்பூ அல்லது  சிகைக்காய் போட்டு நன்கு  தலைக்கு குளிக்கவும்

வெங்காய சாருடன் தேன் கலந்து பயன்படுத்தலாம்

இதனை  ஒரு அரை மணி  நேரம் அப்படியே ஆற விட்டு பின்பு ஷாம்பூ போட்டு அலசிக் கொள்ளவும்

வெங்காய சாருடன் ஆலிவ் எண்ணெய்

நாம் எடுத்துகொள்ளும் வெங்காய சாற்றில் பாதியளவு ஆலிவ் எண்ணெய் சேர்க்க  வேண்டும் .

இந்த கலவையில் தலையில் நுங்கு தேய்த்து இரண்டு மணி நேரம் அப்படியே விடவும் பின்பு அலசவும் ..

இவ்வாறு செய்து வரும் போது பொடுகு அண்டவே அண்டாது.

வலிமையான  கூந்தலையும் பெற முடியும்

வெங்காய சாருடன் கறிவேப்பிலை

முடி வளர்ச்சிக்கு மிகவும் உகந்த ஒன்று  என்னவென்றால், கறிவேப்பிலையை நன்றாக  அரைத்து, அத்துடன் வெங்காய சாற்றை சேர்ந்து பயன்படுத்தி வந்தால்,கூந்தல் வலுவானதாக  இருக்கும்

தவிர்க்க வேண்டியவை

வெங்காய சாற்றை பயன்படுத்தும் போது மென்மையான ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும்.

மேலும் வெங்காய வாசனை பிடிக்ககாத்தவர்கள் அதற்கேற்றார் போல் மற்ற வாசம் கொண்ட ஷாம்பூவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Walnuts Benefits : வால்நட்ஸ் சாப்பிட சரியான முறை இதுதான்!! அதிக நன்மைகளுக்கு இதை ஃபாலோ பண்ணுங்க
ஆண்களே! உலகமே அழிஞ்சாலும் மனைவி கிட்ட இந்த '3' விஷயங்களை சொல்லாதீங்க