
நாம் தினமும் அணியும் ஆடைகளில், ஆண்கள் பயன்படுத்தும் சட்டையில் பட்டன் வலது பக்கமாகவும், பெண்கள் சட்டையில் இடப்புறமாகவும் பட்டன் இருக்கும் என்பதை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் .
வலப்புறம் இடப்புறம் என்ற இந்த சிறிய வேறுபாடு , எதற்காக இருக்கிறது என்று தெரியுமா ?
விக்டோரியா மகாராணி காலத்திலேயே சட்டை போட்டுக் கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது . அதே வேளையில் பணக்கார வர்க்கத்தை சேர்ந்தவர்களே பட்டன் வைத்து ஆடை அணிவது வழக்கமாக இருந்தது .
அவ்வாறு அவர்கள் அணியும் அந்த ஆடையின் பின் பக்கத்தில் பட்டன் இருப்பதால், பணிப்பெண் தான் அவர்களுக்கு பட்டன் போட்டு விடுவார்கள் . அவ்வாறு பட்டன் போட்டு விடும் போது, பெண்களுக்கு வலது பக்கம் கையிலிருந்து இடப்பக்க வளையத்தில் மாட்டி விடுவார்கள் . இந்த வகையில் பட்டன் போடுவதற்கு சுலபமாக இருந்ததால், அதனையே தொடர்ந்து பழக்கத்தில் கொண்டுவரப்பட்டது.
ஆண்களை பொறுத்தவரையில், அவர்களே சட்டை அணிந்து கொள்வதால் அவர்களுக்கு வலப்பக்கம் பட்டன் வைக்கப்பட்டுள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.