குழந்தையின் தொப்புள் கொடியை ஏன் உடனே அகற்றுகிறீர்கள்......?

 
Published : Oct 15, 2016, 04:00 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
குழந்தையின் தொப்புள் கொடியை  ஏன்  உடனே  அகற்றுகிறீர்கள்......?

சுருக்கம்

நவீன யுகத்தில், குழந்தை பிறந்த உடனே, அதன் தொப்புள்கொடியை துண்டித்துவிடுகின்றனர். ஆனால், அப்படிச் செய்வதால், அந்த குழந்தை வளரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக, இயற்கை மருத்துவ முறைகள் தெரிவிக்கின்றன  என்பது  குறிப்பிடத்தக்கது.
 

ஆனால், உண்மையில், அந்த சிறிது நேரம் தொப்புள் கொடியை வெட்டாமல் வைத்திருந்தால் ஏற்படும் நன்மை ஏராளம் என்பது  நம்மில்   எத்தனை பேருக்கு  தெரியும்.  


இப்போதெல்லாம், தொப்புள் கொடியை குழந்தை பிறந்த உடனேயே வெட்டி தொப்புள் கொடியை பாதுகாக்கும் வங்கியில் வைத்து விடுவார்கள். அதற்கான தொகையையும்  நாம் செலுத்த  வேண்டும்.


வருங்காலத்தில் குழந்தைக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை குணப்படுத்த தொப்புள் கொடியிலிருந்து மருந்துகள் தயாரிக்கும் ஆராய்ச்சி நடக்கிறது. ஏனெனில் தொப்புள் கொடியில் உள்ள ஸ்டெம் செல்கள் நோய்களை குணப்படுத்தும் வல்லமையை கொண்டுள்ளன.

குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் ஸ்டெம் செல்கள் தொப்புளில் இருந்து குழந்தைக்கு தானே சென்று விடும். மேலும் ஸ்டெம் செல்கள் இறங்கிய பிறகுதான் கர்ப்பப்பையில் இருந்து தொப்புள் கொடி தானாகவே, விடுபடும் என்பது  நிகர்சனமான  உண்மை ...!!!

 

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மன அழுத்தம் குறைக்கும் மந்திர பானங்கள்
நேரத்தை கையாள சரியான வழி இதுதான் - சாணக்கியர் அட்வைஸ்