ரயில் பயணியை தேடி வருகிறது  ஓட்டல் உணவு.....!!!

 
Published : Oct 14, 2016, 07:57 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
ரயில் பயணியை தேடி வருகிறது  ஓட்டல் உணவு.....!!!

சுருக்கம்

 

ரயில் பயணம்  நம்  அனைவருக்கும் பிடிக்கும் ஆனால்,  ஆனால்  ரயிலில்  வழங்கப்படும் உணவுகள்  அனைவருக்கும் பிடிக்குமா  என்றால்.... கேள்விகுறி தான் ...!

ஆனால்  இந்த   கவலை  இனி இல்லை..... நாம்  விரும்பிய  உணவை , தேவையான  நேரத்தில்,  நம் இருக்கைக்கே  வந்து  கொடுக்க தயாராகி  விட்டது  பல  உணவகங்கள்........

இதற்கான  முழு முயற்சியில்,  இந்தியன்  ரயில்வே  சில  உணவகங்களுடன்  ஒப்பந்தம்  செய்துள்ளது  என்பது குறிபிடத்தக்கது. .

இதன்படி பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவுகளை, ரயில்வேயுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட உணவகங்களில் இருந்து அவை இருக்கும் ஊர்களுக்கு அருகில் உள்ள ரயில் நிலையங்கள் வழியாக செல்லும்போது பெற்றுக்கொள்ளலாம். 

அதாவது,  ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும், 2 நிமிடங்களில் பயணிகள் ஆர்டர் செய்த உணவு அவர்கள் இருக்கும் பெட்டிக்கே வந்து சுடச்சுட உணவு வழங்கப்படும். அப்போது அதற்கான தொகையை செலுத்தினால் போதும்.

இ-கேட்டரிங் என்ற இந்த திட்டம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.  இதன் அடுத்த கட்டமாக பேஸ் கிச்சன் எனப்படும் ரயில் நிலைய உணவகங்களை நிறுவப்பட உள்ளதாகதாகவும்   செய்திகள்  வெளியாகி உள்ளது.  

இதனை  தொடர்ந்து, மொபைல் ஆப்ஸ் மூலமாகவும் உணவுகளை ஆர்டர் செய்யலாம் என்பது  கூடுதல்  சிறப்பு .

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மன அழுத்தம் குறைக்கும் மந்திர பானங்கள்
நேரத்தை கையாள சரியான வழி இதுதான் - சாணக்கியர் அட்வைஸ்