காபி டீக்கு அடிமையா நீங்கள்.......இதோ உங்களுக்காக மூலிகை காபி ரெடி ...!!!

 
Published : Oct 14, 2016, 12:27 AM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
காபி டீக்கு அடிமையா  நீங்கள்.......இதோ   உங்களுக்காக  மூலிகை  காபி  ரெடி ...!!!

சுருக்கம்

அதிகமாக காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அது அளவுக்கு மீறினால் எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதும் தெரியும். இருப்பினும், அப்பழக்கத்தை விட முடியாமல் அவர்கள் தவித்து வருவர். அப்படி தவிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் மூலிகை காபி செய்து குடிப்பதை கற்றுக் கொள்ளுங்கள்!!

தேவையான பொருட்கள்:
ஏலரிசி - 25 கிராம்,

வால்மிளகு - 50 கிராம்,

சீரகம் - 100 கிராம்,

மிளகு - 200 கிராம்.

செய்முறை:

மேற்கண்டவற்றை வெயிலில் நன்கு காயவைத்து தனித் தனியே இடித்து தூள் செய்து பிறகு ஒன்று சேர்த்து இடித்து கலந்து கொள்ளவும்.

நீண்ட கொடி அருகம்புல்லை வேர், தழை இல்லாமல் தண்டுப் பகுதியாக இரண்டு கைப்பிடி அளவு எடுத்து மிகச்சிறியதாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு 500 மிலி நீர் விட்டு அடுப்பில்வைத்து சூடு ஏறியதும், மேலே கூறிய பொடியில் 2 டீஸ்பூன் போட்டு கலந்து நன்கு கொதிக்க வைத்து 200 மிலி அளவில் வற்றிய பிறகு வடி கட்டி எடுத்து, இதனுடன் 200 மிலி காய்ச்சிய பால் கலந்து சர்க்கரை சேர்த்து காலையில் தினமும் சாப்பிட்டு வரலாம்.

காபி ருசி மாறாமல் இனிமையாக இது இருக்கும். இதனால் நோய்கள் பயமே இல்லாமல் இருக்கலாம். மேலும், பல விதமான நோய்களும் இந்த காபிக்கு கட்டுப்படுகின்றன.

இந்த அருகம் புல் காபியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ,

  • இரத்தம் சுத்தமாகும்.
  • நீண்ட நாள் ஆங்கில மருந்துகள் உட்கொண்ட விஷத்தன்மை உடலை விட்டு நீங்குகின்றது.
  • நரம்புத்தளர்ச்சி நீங்கும்,
  • அதிக பித்தம், பித்த மயக்கம், நெஞ்செரிச்சல் நீங்கும்.
  • குடல் சுத்தமாகும்,
  • மூளை வலுவடைந்து நினைவாற்றல் பெருகுகின்றது
  • .மாதவிடாய் கோளாறுகள் சீராகும்.
  • வெள்ளைப்படுதல், அடி வயிறு கனத்தல், தொடை நரம்பு இழுத்தல் அனைத்தும்  சரியாகும்
  • குழந்தைகள் சாப்பிட்டு வர சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

அருகம் புல் .....எந்த  அளவுக்கு  உடல்  நலத்திற்கு  உகந்தது  என்று அனைவருக்கும்  தெரியும். ....கண்ணெதிரே  இருக்கும் அருகம்  புல் சாற்றை  தினமும்  அருந்தி ... நல்ல  வளமான  வாழ்வை  வாழ்வோம்.......!!!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!