உச்சக்கட்ட டென்ஷனில் உள்ளது........பேரிழப்பை சந்தித்த சேம்சங் நிறுவனம்.....!!!

 
Published : Oct 14, 2016, 12:02 AM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
உச்சக்கட்ட டென்ஷனில் உள்ளது........பேரிழப்பை சந்தித்த சேம்சங் நிறுவனம்.....!!!

சுருக்கம்

சேம்சங் கேலக்ஸி நோட் 7  ஆல் எழுந்த  பல சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்கும்  வண்ணம் தற்போது,   சேம்சங் கேலக்ஸி நோட் பயன்படுத்த  முழுவதுமாக  தடை விதிக்கபட்டது.

இந்த அறிவிப்பால், சேம்சங்  நிறுவனத்தின்   சந்தை  மதிப்பு  பெரிதும்  பாதிகபட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும், 20  பில்லியன்  டாலர் இழப்பை சந்தித்துள்ளதாக  செய்திகள்  வெளியாகி உள்ளது.

இது குறித்து சேம்சங்  நிறுவனம் தெரிவிக்கையில்,

சேம்சங் கேலக்ஸி நோட்7  மற்றும் ரீப்ளேஸ் செய்த சேம்சங் கேலக்ஸி நோட்  எதுவாக  இருந்தாலும், பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதனை  பாதுகாப்பான  முறையில் திரும்ப செலுத்த , வழி வகை  செய்துள்ளதாக  தெரிவித்துள்ளது நிறுவனம்.

மேலும், இது குறித்து பல  ஆய்வுகள்  மேற்கொண்டு வருவதாகவும், சேம்சங்  நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது,

இதுவரை , உலகளவில்,  சேம்சங் கேலக்ஸி நோட்  பற்றி சுமார் 2.5   மில்லியன்  புகார்கள்  வந்துள்ளதாக  புள்ளி விவரம்  தெரிவிக்கின்றது.

மக்களிடையே  நல்ல  வரவேற்பை  , பெற்றிருந்த சேம்சங் நிறுவனம் , தற்போது எழுந்த  இந்த  பிரச்சனையால் , சந்தையில் சற்று  சரிவை  சந்தித்து  வருகிறது என்றுதான்  கூற வேண்டும் .

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!