டென்ஷனோடு உடற்பயிற்சி செய்யாதீங்க.........வருகிறது "திடீர் மாரடைப்பு ""

 
Published : Oct 14, 2016, 12:47 AM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
டென்ஷனோடு உடற்பயிற்சி செய்யாதீங்க.........வருகிறது "திடீர் மாரடைப்பு ""

சுருக்கம்

நம் உடலை சீராக  வைத்துகொள்ள  வேண்டும்  என்ற  விழிப்புணர்வு தற்போது  அனைவருக்கே  வந்துவிட்டது  என்று சொல்லலாம்.

நாம்  வாழும் இந்த , மெக்கானிக் லைப்ல, எப்போ  வேலைக்கு செல்வது,  எப்போ  உடற்பயிற்சி  செய்வது என , எதற்கும் நேரம்  இல்லாமல்  ஓடி  கொண்டே  இருக்கிறோம் .

அதே சமயத்தில், எந்த மனநிலையில்  உடற்பயிற்சி செய்ய  வேண்டும் என்பது  இருக்கு.ஆனால் அதை பற்றிய  கவலை  நமக்கு இல்லை.

இந்நிலையில்  ஒரு புதிய  ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது, கோபமான மனநிலையோடு உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு வரும் என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வானது கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் உலகிலுள்ள 52 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் எடுக்கப்பட்டது.இவர்கள் அனைவரும் தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக  கொண்டவர்கள்  என்பது  குறிப்பிடத்தக்கது.

இவர்களில்  கோபத்தை குறைக்கவும்,வருத்தமான மனநிலையை மாற்றுவதற்காகவும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு,அடுத்த ஒரு மணி நேரத்தில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்  உள்ளது   ஆய்வில்  தெரியவந்துள்ளது   

மன அழுத்தத்தின் மூலம் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பானது,அதே மனநிலையில் உடற்பயிற்சி செய்யும் போது மூன்று மடங்காக உள்ளதாம்.

எனவே உடற்பயிற்சி என்பதை அமைதியான மனநிலையில் மட்டுமே செய்ய வேண்டும் எனவும்,கோபத்தையும்,வருத்தத்தையும் மாற்றி அமைக்கும் காரணியாக உடற்பயிற்சியை பார்க்க வேண்டாம்  என்பதும்  நாம்  அனைவரும்  தெரிந்துகொள்ள வேண்டிய  உண்மை ....!!!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மன அழுத்தம் குறைக்கும் மந்திர பானங்கள்
நேரத்தை கையாள சரியான வழி இதுதான் - சாணக்கியர் அட்வைஸ்