Omicron: ஓமிக்ரான் வகை கொரோனா ஏன் இத்தனை வேகமாக பரவுது தெரியுமா..? நம்மை கலங்கடிக்கும் புதிய ஆய்வு முடிவு..!!

By Anu KanFirst Published Jan 28, 2022, 11:18 AM IST
Highlights

மற்ற கொரோனா பிறழ்வுகளை விட ஓமிக்ரான் வேகமாக பரவுவதற்கு என்ன காரணம் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இருக்கும். இது தொடர்பாக, சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று வெளிவந்துள்ளது.

மற்ற கொரோனா பிறழ்வுகளை விட ஓமிக்ரான் வேகமாக பரவுவதற்கு என்ன காரணம் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இருக்கும். இது தொடர்பாக, சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று வெளிவந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கோரா தாண்டவம் ஆடி வரும் கொரோனாவிற்கு எதிராக,  என்ன தான் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், கரோனா வைரஸ் குறிப்பிட்ட காலத்தில் பின் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா என்று உருமாற்றமடைந்து தாக்கி வருகின்றன. 

அதை தொடர்ந்து, ஒரு சில மாதங்களுக்கு முன்பு கரோனா வைரஸ் டெல்டாக்ரான்  என்ற பெயரில், சைப்ரஸ் நாட்டின் ஒரு சில பகுதிகளில் தென்படத் துவக்கியது. அந்த அச்சம் முடிவதற்குள் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் வௌவால்களில் கண்டுபிடிக்கப்பட்ட ‘நியோ கோவ்’ என்ற  கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளன. முதல் அலையை தொடர்ந்து அந்த வகையில், கடந்த ஆண்டு கரோனாவின் டெல்டா மாறுபாடு இந்தியாவில் இரண்டாம் அலையை ஏற்படுத்தி குறுகிய காலத்தில் பல உயிர்களைப் பறித்தது. அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. 

இந்த சூழலில் கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு மின்னல் வேகத்தில் பரவுவது தொடர்பாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், அதில், ஓமிக்ரான் எந்த பிளாஸ்டிக் மேற்பரப்பிலும் எட்டு நாட்களுக்கும், தோலில் 21 மணிநேரத்திற்கும் மேலாகவும் உயிர்வாழ முடியும் என்று கூறியது. எனவே, மற்ற கொரோனா பிறழ்வுகளை விட ஓமிக்ரான் வேகமாக பரவுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது, ஆல்பா, பீட்டா, டெல்டா மற்றும் காமா போன்ற முந்தைய வகைகளை விட,  கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு, தோல் மற்றும் நகத்தில் அதிக நேரம் உயிருடன் இருக்கும் என்று கூறியுள்ளது. இது தொடர்பான அறிக்கையை ஜப்பானில் உள்ள கியோட்டோ ப்ரிபெக்சுரல் யுனிவர்சிட்டி ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் கொடுத்துள்ளனர்.

ஓமிக்ரான் மாறுபாடு பிளாஸ்டிக் பரப்புகளில் 193.5 மணிநேரமும் தோலில் 21.1 மணிநேரமும் உயிர்வாழும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் பிற வேரியன்ட்டுகளான ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா வகைகள் முறையே 56 மணிநேரம், 191.3 மணிநேரம், 156.6 மணிநேரம், 59.3 மணிநேரம் மற்றும் 114 மணிநேரம் நீடித்தன.

தோலில், சராசரியாக வைரஸ் உயிர்வாழும் நேரம் கொரோனா 8.6 மணிநேரம், ஆல்பாவுக்கு 19.6 மணிநேரம், பீட்டாவுக்கு 19.1 மணிநேரம், காமாவுக்கு 11 மணிநேரம் மற்றும் டெல்டாவில் 16.8 மணிநேரம் உயிர்வாழும் என்று கண்டறிந்தனர். 

ஆல்ஃபா, பீட்டா, டெல்டா மற்றும் ஓமிக்ரான் மாறுபாடுகள் அதிகரித்த சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மைக்கு பதிலளிக்கும் வகையில் எத்தனாலுக்கான எதிர்ப்பில் சிறிது அதிகரிப்பைக் காட்டியதாக ஆராய்ச்சி குறிப்பிட்டது. தோல் மேற்பரப்பில், அனைத்து வேரியன்ட்களும் 35 சதவிகிதம் எத்தனால் 15-வினாடி வெளிப்பாடு மூலம் முற்றிலும் செயலிழக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, ஓமிக்ரான் வேரியன்ட், ஆல்ஃபா, பீட்டா, டெல்டா வேரியன்ட்டுகளை விடவும், கீழ் சுவாச மண்டலமான நுரையீரலில் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துவதாகவும், அதே சமயம் விரைவாகப் பரவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

click me!