Benefits of groundnut: பெண்களுக்கு இதயம், நீரிழிவு பிரச்சனைகளை தீர்த்து...நன்மைகளை அள்ளி தரும் வேர்க்கடலை...!!

Anija Kannan   | Asianet News
Published : Jan 28, 2022, 09:17 AM IST
Benefits of groundnut: பெண்களுக்கு இதயம், நீரிழிவு பிரச்சனைகளை தீர்த்து...நன்மைகளை அள்ளி தரும் வேர்க்கடலை...!!

சுருக்கம்

வேர்க்கடலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

இன்றைய நவீன உலகில், மேற்கத்திய உணவு கலாசாரம் நம்மை ஆட்கொண்டுள்ளது. அதனால், நாம் 
நம்மிடம் இருக்கும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட சில எளிய உணவுப் பொருட்கள் தவிர்த்து வருகிறோம். அத்தகைய எளிய உணவுப் பொருட்களில் ஒன்று வேர்க்கடலை.

வேர்க்கடலை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. மற்ற பருப்பு வகைகளுடன் ஒப்பிடுகையில் விலை குறைந்தது. இதனை இனிப்பு மற்றும் கார உணவுகளில் சேர்க்கலாம். மேலும் வேகவைத்த கடலை, வறுத்த கடலை, கடலைமிட்டாய் போன்ற பல்வேறு வடிவங்களில் உட்கொள்ளலாம். அத்தகைய வேர்க்கடலையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.

வேர்க்கடலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்.
 
வேர்க்கடலையில், ஐசோஃப்ளேவோன்கள், ரெஸ்வெராட்ரோல் மற்றும் பைடிக் அமிலங்கள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. பயோட்டின், தாமிரம், நியாசின், ஃபோலேட், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் ஈ மற்றும் தயமின் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளன.

இதய ஆரோக்கியம்

வாரத்திற்கு ஐந்து முறை, ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை எடுத்துக் கொண்டால் இதய நோய் வராமல் தடுக்கலாம். இவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய்களைத் தடுக்க உதவுகின்றன. இவை சிறிய இரத்தக் கட்டிகள் உருவாக்குவதைத் தடுக்கின்றன, இதனால் உங்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.

நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது

இவைகள் கெட்ட கொழுப்பு மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய ட்ரைகிளிசரைட்ஸ் போன்றவை களைக் குறைத்து, நன்மை தரக்கூடிய நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் ரத்த அழுத்தம் சீராக இருப்பதோடு, சர்க்கரை வியாதியால் உண்டாகக் கூடிய சீரற்ற கொழுப்பு மற்றும் செரிமான மாற்றங்களை கட்டுக்குள் வைக்கின்றன. இது பெண்களுக்கு டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புற்றுநோய்  ஏற்படும் அபாயத்தை தடுக்கும்:

வயதானவர்கள், கடலை மிட்டாய் சாப்பிடுவது இரைப்பை அல்லாத அடினோகார்சினோமா எனப்படும் சில வகையான வயிற்று புற்றுநோயைக் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. வேர்க்கடலை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். இது உலகெங்கிலும் உள்ள பொதுவான ஒவ்வாமைகளில் ஒன்றாகும், எனவே உங்கள் முகத்தில் குமட்டல் அல்லது வீக்கத்தை உணர்ந்தால் கவனமாக இருங்கள்.

உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்கலாம்:

வேர்க்கடலையில், கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக இருந்தாலும், அவை எடை அதிகரிப்பதற்கு பங்களிக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகினறனர். உண்மையில், வேர்க்கடலை சாப்பிடுவது ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும், உடல் பருமனை குறைக்கவும் உதவுகிறது.

வீக்கத்தைக் குறைக்கிறது:

வேர்க்கடலை நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக இருப்பதால், இது முழு உணவாக திருப்தி அளிக்கிறது மற்றும் இதனுடன் வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் உங்கள் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் B3 மூளையின் நினைவாற்றலை துரிதப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, தினமும் ஒரு அவுன்ஸ் நிலக்கடலை எடுத்துக்கொண்டால் 25% பித்தப்பையில் கல் (GallStone) உருவாவது தடுக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மேற்கத்திய உணவுகளை தவிர்த்துவிட்டு, நம்முடைய பாரம்பரிய உணவுகளை உண்டால் ஆரோக்கியமாக வாழலாம்!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்