Sexual: செக்ஸ் வாழ்வில் பெண்களை திருப்தி படுத்த முடியலையா...? இது தான் ஒரே வழி...நிபுணர்கள் அட்வைஸ்...!!

By Anu Kan  |  First Published Jan 28, 2022, 8:09 AM IST

உடலுறவுக்கொள்ளும் போது தம்பதிகள் அதிகம் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


பாலியல் உறவு என்பது ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் இடையேயான அன்பின் வெளிப்பாடு ஆகும். அன்பை உருவாக்குவது மிகவும் தீவிரமான உடல் செயல்பாடாகும். பாலியல் உறவு இருபாலருக்கும் இன்பமான அனுபவமாக இருத்தல் அவசியம். ஒருவேளை ஒருவர் அதனைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், அதை உண்மையான மகிழ்ச்சியோடு அனுபவிக்க இயலாது. அவற்றை புரிந்து கொண்டு, மற்றொருவர் அதனை சரி செய்ய முயற்சிக்காக வேண்டும். ஆனால், சில ஆண்கள் பெண்களை போதை பொருளாக மட்டுமே பார்க்கும் எண்ணம், இன்னமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.எனவே, பெண்களை இதற்காக மட்டும் பயன்படுத்தாமல் அவர்களின் மனநிலையையும் புரிந்து நடப்பது மிகவும் முக்கியமானது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், பாலியல் உறவைத் தொடங்க உங்கள் துணையைத் தடுப்பதற்கான பொதுவான காரணங்களைப் பற்றியும், அதற்கு என்ன தீர்வு என்பது குறித்த கருத்துக்களையும் பற்றியும் இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

பாலியல் உறவில் பெண்ணை புரிந்து கொள்வது:

 உடலுறவின் போது சில விஷயங்கள் தெரியவில்லை, என்றால் அதற்கான பெண்களை கேலி செய்வதை அந்நேரத்தில் தவிர்க்க வேண்டும். 

ஆண்கள் படுக்கையறையில் தங்களின் துணை அவர்களுக்கு அடங்கி இருக்க வேண்டும் என நினைப்பதைத் தவிர்க்க வேண்டும்.  

பாலியல் உறவு குறித்து உங்கள் மனைவிக்கு தெரியவில்லை என்றால் என்ன என்று சொல்லிக்கொடுங்கள். தேவையில்லாமல் விமர்சிப்பதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.

பொதுவாக கணவன், மனைவி இருவருக்குள்ளேயும் பாலியல் இன்பத்தின் உச்சம் முற்றிலும் மாறுபட்டிருக்கும். எனவே ,சில நேரங்களில் ஃபோர்ப்ளே எனப்படும் பாலியல் உறவில் இன்பம் அனுபவித்துவிட்டு பின் உறவில் உச்சம் கொள்வது பெண்ணிற்கு வலியைத் தவிர்க்க உதவும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதனையும் மீறியும் உங்களுக்கு வலி ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உடலில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா? என்பதைத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

பாலியல் ஹார்மோன்களான டி.எச்.இ.ஏ, ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற சில ஹார்மோன்கள் உடல் எடை அதிகரிப்போடு தொடர்புடையன. மேலும், PCOS போன்ற ஹார்மோன் பிரச்சனைகளின் தற்செயலான தொடக்கமாகவும் கூட பெண்களின் உடல் எடை அதிகரிக்கும்.  இதனால், பெண்களுக்கு உடலுறவில் பிரச்சனைகள் இருக்கும். அதனை, கணவர் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

தாம்பத்திய உறவைத் தொடங்கும் முன் எழும் யோசனைகள்:

அதே சமயம், பெண்களே உங்கள் துணையுடன் நீங்கள் பாலியல் செயல்பாடுகளில் நெருக்கமாக இருக்கும்போது உங்கள் உடல் எடையைப் பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பொருத்தும் அமையும். ஒருவேளை உங்களைப் பற்றி நீங்கள் அதிக நம்பிக்கையுடனும், கவர்ச்சியுடனும் உணரும்போது, உங்கள் பாலியல் வாழ்க்கை மிகவும் சந்தோசமானதாக அமையும்.

 உங்களுக்கு அலுவலகத்தில் நிறைய பிரச்சனைகள் இருக்கலாம். இதனால் எப்போதும் பிஸியாகவே இருக்கலாம். இருந்தாலும் உங்கள் துணையின் தேவைகளையும், ஏக்கங்களையும் புறக்கணிக்காதீர்கள் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் இதுப்போன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.

தாம்பத்திய உறவு என்பது ஆண் மற்றும் பெண் இருவருக்கும் இன்பம் இருக்கும் என்றாலும், எனவே, பெண்களை  உறவுக்காகமட்டும் பயன்படுத்தாமல் அவர்களின் மனநிலையையும் புரிந்து நடப்பது மிகவும் முக்கியமானது. இந்த புரிதல் இல்லாமல் இருக்கும் போது தான் தேவையில்லாத பிரச்சனைகளைத் தம்பதியினர் சந்திக்க நேரிடுகிறது என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.
 

click me!