Beetroot recipes: குளிர்காலத்தில் அதிக விளைச்சல் தரும் பீட்ரூட்..? குறைந்த செலவில் நிறைய நன்மைகள்...

Anija Kannan   | Asianet News
Published : Jan 28, 2022, 07:21 AM IST
Beetroot recipes: குளிர்காலத்தில் அதிக விளைச்சல் தரும் பீட்ரூட்..? குறைந்த செலவில் நிறைய நன்மைகள்...

சுருக்கம்

காலை உணவை ஸ்கிப் பண்றீங்களா? குளிர்காலங்களில், குறைந்த செலவில் அதிக விளைச்சலைத் தரக்கூடிய பீட்ரூட்டைப் பயன்படுத்தி விதவிதமான காலை உணவை மேற்கொள்ள முடியும்.

உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரை, குளிர்காலத்தில் ஒருவர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், குளிர்காலங்களில் பெரும்பாலும் பல நோய்த்தொற்றுகள் மற்றும் வியாதிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதிலும், நீங்கள் காலை உணவை ஸ்கிப் பண்றீங்களா? அப்படினா உடல் ஆரோக்கியத்தை மெல்ல மெல்ல நீங்களே பாதிக்கச்செய்ய வழிவகை செய்கிறீர்கள் என்று தான் அர்த்தம். உலக அளவில், காலை உணவைத் தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாக கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் என்றும் பலர் 'நேரமில்லை' என்றும் காலை உணவை தவிர்க்கிறார்கள்.  

இது தொடர்பாக காலை உணவைத் தவிர்த்தவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், பெரும்பாலானோருக்கு ரத்த அழுத்தம் இயல்பைவிட அதிகமாக இருந்திருக்கிறது. உயர் ரத்த அழுத்த நோயாளிகள், 'காலையில் தவறாமல் சாப்பிடுகிறீர்களா' என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள். காலை உணவு சாப்பிடுபவர்களைவிட, உணவைத் தவிர்ப்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 27 சதவிகிதம் அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.

 எனவே, ஒருவர் தன்னுடைய காலை உணவை சரியான நேரத்தில் உட்கொள்ளும்போது அவர்களுக்கு நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, அனைத்துப் பணிகளையும் செய்வதற்கு உறுதுணையாக இருக்கும். மேலும், நாம் சுறுசுறுப்பாக இருக்க முடியும். குளிர்காலத்தில் அதிகம் உற்பத்தியாகும் காய்கறிகயையும் நம்முடைய டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். அதன்படி தற்போது குளிர்காலங்களில் அதிக விளைச்சலைத் தரக்கூடிய  பீட்ரூட்டை பயன்படுத்தி விதவிதமாக என்ன மாதிரியான காலை உணவை மேற்கொள்ளலாம் என இங்கே தெரிந்துகொள்வோம்..

பீட்ரூட் கட்லெட்:

காலை நேர உணவிற்கு ஏற்ற ஒரு வகை ரெசிபி தான் பீட்ரூட் கட்லெட். பொதுவாக கட்லெட் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச்சாப்பிடக்கூடிய ஒன்றாகும். எனவே கட்லெட்டில் பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யும்போது அனைவருக்கும்  கூடுதல் ருசியைத் தருவதோடு அதிக ஊட்டச்சத்தையும் நமக்கு அளிக்கிறது.

பீட்ரூட் சில்லா:

கேப்பை ரொட்டி, உருளைக்கிழங்கை வைத்து ஆலு பரோட்டா செய்வது போல பீட்ரூட்டிலும்  செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான் பீட்ரூட் சில்லா( Beetroot chilla). இதனை செய்வதற்கு முதலில், பீட்ரூட்டை நன்றாக அரைத்து எடுத்துக்கொண்டு அதோடு கோதுமை, கடலை ஏதாவது ஒரு மாவினைச்சேர்ந்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், அதோடு நம்முடைய சுவைக்கு ஏற்றவாறு உப்பு, மிளகுத்தூள், மசாலா சேர்த்து வழக்கம்போல தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால் நல்ல சத்தான பீட்ரூட் சில்லா சிறிது நேரத்திலேயே ரெடியாகிவிடும்.

 பீட்ரூட் சாலட்:

பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் சாலட் செய்யும்போது இதனுடன் ஆப்பிள், பார்லி, அருகுலா மற்றும் மசாலா சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த சாலட்டில், இனிப்பும், காரமும் கலந்து இருக்கும்போது சாப்பிடுவதற்கு நல்ல சுவையாக இருக்கும்.

பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸ்:

நறுக்கிய பீட்ரூட் மற்றும் கேரட் சேர்த்து நன்றாக மிக்ஸில் அரைத்து ஜூஸ் செய்து பருகலாம். டயட்டில்  இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பீட்ரூட், கேரட் ஜூஸ் நல்ல பானமாக இருக்கும். மேலும் பீட்ரூட், கேரட் ஜூஸில், நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால் ஜூரணிக்க அதிக நேரம் எடுக்கும். பசியும் அதிகளவில் இதனால் எடுக்காது என்பதால் உடல் எடையைக் குறைக்க இது சிறந்த டயட்டாக இருக்கும். மேலும் நாம் சாப்பிடக்கூடிய பீட்ரூட்டில் வைட்டமின் A,வைட்டமின் B1,வைட்டமின் B2, க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது. மேலும், இதில் உள்ள மாவுச்சத்துக்கள் கண்ணுக்கும் உடலுக்கும் அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை