Constipation: நாள்பட்ட மலசிக்கல் பிரச்சனையா?அத்திப் பழத்தை இந்த வழிகளில் பயன்படுத்தினால்! உடனே தீர்வு தருமாம்!

By Anu KanFirst Published Jan 28, 2022, 10:24 AM IST
Highlights

மலச்சிக்கலை போக்க அத்திப் பழத்தை, எந்ததெந்த வழிமுறைகளில் பயன்படுத்தலாம் எனபதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

செரிமான கோளாறுகளால் ஏற்படும் மலசிக்கல் பிரச்சனை, நம்மை படாத பாடு படுத்தி விடும். மலச்சிக்கல் பிரச்சனை முற்றிய நிலையில் மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்த மலச்சிக்கல் பிரச்சனையை போக்க  அத்திப் பழம் பெரிதும் உதவியாக உள்ளது. 

மலச்சிக்கலை போக்க அத்திப் பழத்தை எந்ததெந்த வழிமுறைகளில் பயன்படுத்தலாம்:

உலர்ந்த இந்த பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டு அந்த ஊறவைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலச்சிக்கலும் தீரும். 

இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும். அத்தி மரத்தை லேசாக கீறினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாகும். 

அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டாலும் பால் வடியும். தெளிந்த இந்த நீரை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.

அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாக பயன்படுகிறது. 

சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீங்கும். ரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.

இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள். அத்திப்பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும். உலர்ந்தவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.

இந்தியாவில் பெரும்பாலும் இனிப்பு மற்றும் சாறு நிறைந்த அத்திப் பழங்கள் அதிகமாக ட்ரை ஃப்ரூட்ஸ் வடிவிலே அதிகமாகக் கிடைக்கின்றன. ஆனால், அதை பெரும்பாலும் பிரஷ்ஷாக சாப்பிட விரும்புகிறவர்கள் தான் அதிகம். பிரஷ் அத்திப் பழங்களை உலர் அத்திப் பழங்களுடன் ஒப்பிடும்பொழுது, கலோரிகள் மற்றும் சர்க்கரை உள்ளடக்கம் மிகவும் குறைவாக உள்ளது.


 
இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் 4 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் A, வைட்டமின் C அதிக அளவிலும் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. ​இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு பாதுகாப்பான மாற்றாக அமைகிறது. மேலும், உலர்ந்த அத்திப் பழங்களில் கால்ஷியம் சத்து நிறைந்துள்ளது. ஒரு அத்திப்பழத்தில் 13 மில்லி கிராம் கால்சியம் சத்து  நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!