
இந்தியாவில் பொது மக்களுக்கு பொதுவான மற்றும் சிக்கனமான போக்குவரத்து வழிமுறையாக ரயில்வே உள்ளது. ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய நெட்வொர்காக ரயில்வே உள்ளது. வசதியான, பாதுகாப்பான பயணம், டிக்கெட் விலை குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். எனினும் ரயில்வே மற்றும் ரயில்கள் பற்றி பலருக்குத் தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. அப்படி ஒரு சுவாரஸ்யமான தகவலை தான் இன்று பார்க்க போகிறோம். நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவராக இருந்தால், நீண்ட தூர ரயில்களில் எப்போதும் ரயிலின் நடுவில் ஏசி பெட்டிகள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும்.
ஸ்லீப்பர் பெட்டிகளை தொடர்ந்து என்ஜினுக்குப் பிறகு ஜெனரல் பெட்டிகள் அமைந்திருக்கும். எல்லா ரயில்களிலுமே, ரயிலின் நடுவில் ஏசி பெட்டிகள் உள்ளன, அதைத் தொடர்ந்து சில ஸ்லீப்பர் கோச்சுகள் மற்றும் ரயிலின் பொது பெட்டிகள் உள்ளன. ஆனால், பொது பெட்டிகள் அல்லது அன் ரிசர்வ்டு பெட்டிகள் ரயிலின் முன்பகுதி அல்லது கடைசியில் இணைக்கப்பட்டிருக்கும். இது ஏழை எளிய மக்களின் உயிருடன் விளையாடுவது என்றும் பலரும் குற்றம்சாட்டினர். ஆனால் இதற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஒவ்வொரு பெட்டியின் இருப்பிடமும், ரயில் இயக்க விதிகளின் படி அமைக்கப்படுகிறது என்றும் இதில் ஏழை, பணக்காரர் என்ற எந்த வித்தியாசமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பெட்டிகள் ஏன் ரயிலின் தொடக்கத்தில் அல்லது முடிவில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளது. மற்ற பெட்டிகளை காட்டிலும் பொது பெட்டிகளில் தான் அதிகமான பயணிகள் ஏறி இறங்குவார்கள். கூட்டம் அதிகமாக இருந்துகொண்டே இருக்கும். ரயிலின் நடுப்பகுதியில் பொதுப் பெட்டிகளை நடுவில் சேர்த்தால் அதிக எடை ஏற்பட்டு சமநிலை இருக்காது.
அதிக பெரும் பணக்காரர்களை கொண்ட நகரங்கள்.. சென்னைக்கு எந்த இடம்? கோவை, திருப்பூரும் லிஸ்டுல இருக்கு!!
ரயிலின் புறப்பாடு மற்றும் நிறுத்தத்திலும் சிக்கல் ஏற்படும். எனவே ரயிலின் முன் பகுதி அல்லது பின் பகுதியில் பொது பெட்டிகள் இருப்பதால், பயணிகள் கூட்டம் சமமாக பிரிக்கப்படுகிறது. மேலும் ரயிலின் என்ஜினை சேர்ப்பதிலும், ரயிலின் சமநிலையிலும் பயனுள்ளதாக இருக்கும். விபத்து, தடம் புரள்தல் அல்லது ஏதேனும் அவசர காலங்களில் அதிக எண்ணிக்கையை கொண்ட இந்த பெட்டிகளில் இருந்து மக்களை விரைவாக வெளியேற்ற முடியும். எனவே இது பயணிகளின் பாதுகாப்புக்கும் நன்மை பயக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.