சாலையில் செல்லும் பைக், கார் போன்ற வாகனங்களை தெருநாய்கள் துரத்தி வருவது ஏன் என்ற கேள்விக்கு ஆராய்ச்சியாளர்கள் விடை கூறுகின்றனர்.
வாகனங்களில் செல்லும்போது தெருநாய்கள் பின்தொடர்ந்து வருவதைப் பார்த்திருப்போம். முழு பலத்தையும் பயன்படுத்து நாய்கள் நம் வாகனங்களைத் துரத்துக்கொண்டு ஓடிவரும். நாய்களின் இவ்வாறு விரட்டி வருவதால் சாலை விபத்துகளும் அவ்ப்போது ஏற்படுகின்றன.
நாய்கள் ஏன் இப்படி வாகனங்களில் செல்பவர்களை துரத்துகின்றன என்பது பலருக்கும் புரியாத புதிராக இருக்கும். அதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளார்கள். அதில், நாய்கள் வாகனங்களை விரட்டி வருவதற்குக் காரணம் நம் மீது கோபம் அல்ல என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கு முக்கியக் காரணம் நம் வாகனத்தில் பிற நாய்களின் சிறுநீர் நாற்றம் வீசுவதே காரணம் என்று கூறுகிறார்கள். நாய்கள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்திருக்கும் பைக், கார் போன்ற வாகனங்கள் மேல் சிறுநீர் கழிப்பதைப் பார்த்திருப்போம். அதனை மோப்ப சக்திக்குப் பேர்போன நாய்கள் எளிதாக நுகர்ந்துவிடும். அந்த சிறுநீர் நாற்றத்தால்தான் நாய்கள் வாகனங்களை விரட்டுகின்றன.
ஒவ்வொரு நாயும் குறிப்பிட்ட பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாக நினைத்திருக்கும். வேறு நாய்கள் அந்தப் பகுதிக்குள் வருவதை அவை அனுமதிப்பதில்லை. அந்த வகையில், வாகனத்தில் இருந்து வரும் நாற்றத்தை வைத்து வேறு நாய் தங்கள் பகுதிக்குள் நுழைவதாக எண்ணி வாகனத்தைத் துரத்தும்.
நாய்கள் வேட்டையாடக்கூடவை என்பதால் வாகனங்களை தங்கள் வேட்டைக்குரிய இரையாக நினைத்தும் துரத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். வாகனங்களை வேகமாக ஓட்டாமல் நிதானமாக ஓட்டிச் சென்றாலே நாய்கள் துரத்துவதால் விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என்று கூறுகிறார்கள்.