வரதட்சணை குறைவாக இருந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

Published : Mar 11, 2023, 04:49 PM ISTUpdated : Mar 11, 2023, 05:05 PM IST
வரதட்சணை குறைவாக இருந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

சுருக்கம்

திருமணத்தில் விருப்பம் இல்லாத மணப்பெண் திருமணத்தை நிறுத்துவதற்காக கூடுதலாக வரதட்சணை வேண்டும் என்று கேட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வரதட்சணை குறைவாக இருப்பதாகக் கூறி கடைசி நிமிடத்தில் தனது திருமணத்தை நிறுத்திவிட்டார்.

வருங்கால மணப்பெண்களுக்கு மணமகன் குடும்பத்தார் சார்பாக வரதட்சணை வழங்கப்படுவது பழங்குடி மக்களிடையே வழக்கத்தில் உள்ளது. அதன்படி மணமகனின் குடும்பத்தினர் மணமகள் வீட்டாருக்கு ரூ.2 லட்சம் பணத்தைக் கொடுத்துவிட்டனர். கடைசி நேரத்தில் மணப்பெண் கொடுக்கப்பட்டதொகை போதாது என்றும் இன்னும் அதிகமாக வரதட்சணை கொடுக்கவேண்டும் என்றும் கோரியுள்ளார்.

பத்ராத்ரி கொத்தகுடேமில் உள்ள அஸ்வராவ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு கட்கேசர் பகுதியில் கடந்த வியாழக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் தனது கிராமத்தில் இருந்து திருமண மண்டபத்துக்குச் செல்லும் முன் மணப்பெண் திருமண உறுதிமொழி எடுக்க மறுத்துவிட்டார். மண்டபத்திற்கு வருகை தந்திருந்த மணமகன் வீட்டாரும் உறவினர்களும் மணமகளின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

Dowry Case: வரதட்சணையில் பழைய பர்னீச்சர்... திருமணத்தை நிறுத்திய மணமகன்!

முகூர்த்த நேரம் நெருங்கியும் மணமகள் திருமண இடத்திற்கு வராததால், மணமகன் வீட்டார் அவரது குடும்பத்தினர் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று விசாரித்தனர். அப்போது மணப்பெண் கூடுதலாக வரதட்சணை வேண்டும் என்று கேட்டதால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் மணமகன் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் மணப்பெண் வீட்டாரை வரவழைத்து விசாரணை நடத்தினர். பின்னர், "இரண்டு குடும்பத்தினரும் பிரச்சினையைத் தங்களுக்குள் தீர்த்துக்கொண்டனர். திருமணம் கைவிடப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. மணமகளுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. எனவே அவர் அதிக வரதட்சணை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்" என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுயுள்ளார்.

மணமகள் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், மணமகன் வீட்டார் வரதட்சணையாகப் பெற்ற 2 லட்சம் ரூபாய் பணத்தை மணப்பெண்ணின் குடும்பத்தினரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டனர் என்றும் இரு வீட்டாரும் சமூகமாகப் பிரிந்து சென்றுவிட்டனர் எனவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் காதலி மிரட்டியதால் நடுரோட்டில் மனைவியிடம் இருந்து தப்பி ஓடிய கணவர்!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்