பாபா வாங்கா இறந்து 26 ஆண்டுகள் கடந்து விட்டாலும், அவர் கணித்துச் சென்ற விஷயங்கள் இன்றும் பலித்து வருகிறது.
பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா பார்வை இழந்தவர். ஆனால், இவர் கூறிச் சென்றவை இன்றும் பலித்து வருகிறது. அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீதான தீவிரவாத தாக்குதல், அமெரிக்காவின் அதிபராக பாரக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் வருவார்கள் என்று கூறியிருந்தது, இந்திரா காந்தி கொல்லப்படுவார் என்று கூறியிருந்தது அனைத்தையும் இவர் முன்பே கணித்து இருந்தார். அவை அனைத்தும் அப்படியே நடந்தன. 2023ஆம் ஆண்டுக்கான கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். அவை என்னவென்று பார்க்கலாம்:
* சோலார் சுனாமி அல்லது சோலார் புயல் (சூரிய புயல்) ஏற்படலாம். சோலார் சுனாமி ஏற்படும்பட்சத்தில் பூமியின் மீதான காந்தப் போர்வை அழிக்கப்படலாம்
* வேற்று கிரகத்தில் இருந்து வரும் ஏலியன்களால் பூமியில் இருக்கும் உயிரினங்கள் லட்சக்கணக்கில் அழிக்கப்படலாம்
* பூமியின் சுற்றுப்பாதை மாறும். சிறிதளவு மாற்றம் ஏற்பட்டாலும், பூமியில் இது பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
Hot Bath: வெந்நீர்க் குளியல் ஆரோக்கியமா? ஆபத்தா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
* குழந்தைகள் பரிசோதனைக் கூடங்களில் உருவாக்கப்படுவார்கள். பிறக்கப் போகும் குழந்தைகளின் நிறம் மற்றும் குணநலன்களை பெற்றோர் தேர்வு செய்வார்கள்.
* மின் உற்பத்தி நிறுவனத்தில் ஏற்படும் மிகப்பெரிய வெடிப்பினால், விஷ வாயு ஆகாயத்தில் மேகமாக தோன்றி, ஆசியாவின் பகுதிகளை பனிப்போர்வை போல மறைக்கும். இதனால், மற்ற நாடுகளில் நோய் பரவலாம்.
* 5079ஆம் ஆண்டில் உலகம் அழியும் என்று ஆருடம் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய இரண்டு சக்திகள் உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தும். இதனால் பெரிய அளவில் உயிர்ச் சேதம் இருக்கும் என்றும் கணித்து இருந்தார். அதன்படி, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது என்று இவரது கணிப்புகளின் மீது நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.
கனவில் பல்லி வருவது அவ்வளவு நல்ல சகுனம் அல்ல..!!