
உணவு சமைக்கவும் ஒரு ஆர்வம் இருக்க வேண்டும். அன்புடன் சமைத்தால் உணவு சுவையாக இருக்கும் என்று கூறுவதும் உண்டு. ஆனால், தினமும் அன்பாக சமைப்பது இயலாத காரியம்தானே. சரி, உப்பு அதிகமாகிவிட்டால் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
பச்சை உருளைக்கிழங்கு:
உணவில் உப்பு அதிகமாக இருந்தால், அதில் பச்சை உருளைக்கிழங்கு துண்டுகளை போடலாம். இது உணவில் உள்ள அதிக உப்பை உறிஞ்சிவிடும். உருளைக்கிழங்கு துண்டுகளை அதில் போடும் முன் நன்றாக கழுவவும். இதற்குப் பிறகு, தோலுரித்து நறுக்கி சேர்க்கவும். சுமார் 20 நிமிடங்கள் உப்பு அதிகமாக இருக்கும் பண்டத்தில் போட்டு விடவும்.
மாவு உருண்டைகள்
கோதுமை அல்லது கடலை மாவு உருண்டைகளை உருட்டவும். அதை பருப்பு அல்லது உப்பு அதிகமான காய்கறிகளில் போடவும். இந்த மாவு உருண்டைகள் உணவின் அதிகப்படியான உப்பை உறிஞ்சிவிடும். உணவை பரிமாறும் முன் இந்த மாவு உருண்டைகளை வெளியே எடுத்துவிடவும்.
எலுமிச்சை சாறு
இந்திய, முகலாய், சைனீஸ் உணவுகளில் காரம் அதிகமாக இருந்தால், எலுமிச்சையை பயன்படுத்தலாம். இதற்கு சாதத்தில் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும். இது அதிக உப்பை உறிஞ்சுவதற்கு உதவும்.
தயிர்
காய்கறியில் உப்பு அதிகமாக இருந்தால், அதனுடன் 1 தேக்கரண்டி தயிர் சேர்க்கலாம். சேர்த்த பின்னர் 5 நிமிடங்கள் சமைக்க வேண்டும். இதனால் கறியின் சுவை குறையலாம்.
வெள்ளை சக்கரையை விட்டுவிடுங்கள்- உடனடியாக இந்த இனிப்புகளுக்கு மாறுங்கள்..!!
புதிய கிரீம்
காய்கறியில் உப்பின் அளவைக் குறைக்க ஃப்ரெஷ் க்ரீமை பயன்படுத்தலாம். இது உப்பைக் குறைப்பதுடன், உங்கள் கறியின் சுவையை அதிகரிக்கும்.
வேகவைத்த உருளைக்கிழங்கு
பருப்பு அல்லது காய்கறியில் உப்பு அதிகமாக இருந்தால், வேகவைத்த 2 முதல் 3 உருளைக்கிழங்கை சேர்க்கவும். இது கூடுதல் உப்பை உறிஞ்சிவிடும்.
சர்க்கரை
உப்புத்தன்மையை குறைக்க ஒரு சிட்டிகை சர்க்கரை (வெள்ளை சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை) சேர்க்க முயற்சிக்கவும். இனிப்பு மற்றும் உப்பு சுவை நிறைந்த கலவையாகும். சர்க்கரை உணவில் உள்ள உப்புத்தன்மையை சமன்நிலைப்படுத்தும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.