குடிக்க வேண்டாம் ! அப்படியே சாப்பிடலாம்… விஸ்கி பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ் !!

By Selvanayagam PFirst Published Oct 9, 2019, 8:03 AM IST
Highlights

விஸ்கியை குடிக்கும்போது அதனுடன் சோடா கலந்தோ  அல்லது தண்ணீர் மற்றும் குளிர் பானங்கள் கலந்தோ அருந்தும் வழக்கம் நடைமுறையில் இருக்கும் நிலையில், தற்போது கிளென்லிவெட்  விஸ்கி நிறுவனம், ஜெல்லி போன்ற கேஸ்யூல்களில் தரவுள்ளது. இதனை மிட்டாய் போல சுவைத்து சாப்பிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மதுப்பிரியர்கள் மதுவை டம்ளர்களில் ஊற்றி மிக மெதுவாக ருசித்து ருசித்து குடிப்பார்கள். அப்போது தங்களது டேஸ்டுக்கு ஏற்றபடி, ஐஸ் கட்டிகள் அல்லது குளிர்ந்த நீர் போன்றவற்றுடன் மிக்ஸ் பண்ணி அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது.

இதற்கு மாற்றாக  அண்மையில்  கிளென்லிவெட் எனும் பிரபல விஸ்கி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பொன்று உலகெங்கிலும் உள்ள விஸ்கி பிரியர்களை அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது பிரபலமான விஸ்கி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான க்ளென்லிவெட், ஜெல்லி போன்ற காப்ஸ்யூல் வடிவில் விஸ்கியை  சாப்பிடும் புதிய வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக சென்ற வாரம் லண்டனில் நடைபெற்ற காக்டெயில் விழாவில், இந்த விஸ்கி காப்ஸ்யூல்களை  இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த ஜெல்லியை  அருந்தாமல்  மிட்டாயை சுவைப்பது போல, இனி விஸ்கியை சுவைக்கலாம். இந்த விஸ்கி  கடற்பாசிச்சாறு உறையில் காக்டெய்ல் காப்ஸ்யூல்களாக சந்திப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு காப்ஸ்யூலிலும் 23 மில்லி திரவம் இருக்கும் என்றும் இந்த விஸ்கி காப்ஸ்யூல்கள், விரைவில் உலகெங்கிலும் விற்பனைக்கு வரும்  என்றும் கிளென்லிவெட்  விஸ்கி நிறுவனம் அறிவித்துள்ளது.

click me!