தென்னம்பிள்ளை நடும் சூர்யா..! ரசிகர்களுக்கு ஒரே குஷி ...!

Published : Oct 08, 2019, 07:20 PM IST
தென்னம்பிள்ளை நடும் சூர்யா..!  ரசிகர்களுக்கு ஒரே குஷி ...!

சுருக்கம்

தன்னுடைய வீட்டில் உள்ள கார்டனில் தென்னஞ்செடியை நட்டு மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுத்து உள்ளார் நடிகர் சூர்யா. பின்னர் தென்னஞ்செடிக்கு நீர் ஊற்றுவதும் மற்றும் மற்ற செடிகளுக்கும் நீர் ஊற்றுவது... என ஆசையாக கார்டனில் வேலை செய்துள்ளார்.

தென்னஞ்செடி நடும் சூர்யா..!  ரசிகர்களுக்கு ஒரே குஷி ...! 

இயற்கையைப் பேணி காப்பதில் பிரபலங்களும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள் தான். அதில் நடிகர் சூர்யாவும் தப்பவில்லை. என்னதான் படம் நடிப்பது, குடும்பம் என மிகவும் பிஸியாக வலம் வந்தாலும் அதற்கு இடையில் கிடைக்கும் நேரத்தில் கார்டனிங் செய்வதில் மிகவும் பிஸியாக இருக்கிறார் நடிகர் சூர்யா

அதன்படி தன்னுடைய வீட்டில் உள்ள கார்டனில் தென்னம்பிள்ளையை நட்டு மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுத்து உள்ளார் நடிகர் சூர்யா. பின்னர் தென்னம்பிள்ளைக்கு நீர் ஊற்றுவதும் மற்றும் மற்ற செடிகளுக்கும் நீர் ஊற்றுவது... என ஆசையாக கார்டனில் வேலை செய்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு பெரும்பாலான ரசிகர்கள் லைக் கொடுத்து உள்ளனர். மேலும் ஆதரவு பதிவுகளையும் போட்டு தள்ளுகின்றனர். இன்னும் ஒரு சிலர் மற்ற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் மறுபதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்