வீட்டில் இந்த செடிகளை மட்டும் வளர்க்காதீங்க.! உங்க வீட்டுல தினமும் சண்டை வரும் !!

By Raghupati R  |  First Published Apr 11, 2023, 7:23 PM IST

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சில செடிகள் மற்றும் மரங்களை வளர்த்தால் வீட்டில் சச்சரவு உண்டாகும் என்று கூறுகின்றனர்.


நீங்கள் வீட்டிற்கு முன்னும், பின்னும் நிறைய செடி, கொடிகளை வளர்த்து வந்தால் உங்களுக்கு வாஸ்து தோஷம் கூட ஒன்றுமே செய்ய முடியாது. வாஸ்து குறைக்கு சிறந்த பரிகாரம் வீட்டில் செடிகளை வளர்ப்பது தான்.  அப்படி இருக்கும் பொழுது வீட்டிற்கு முன் சில செடி கொடிகளை நாம் வளர்த்தால் நமக்கு ஆபத்து வந்து சேரும் என்று எச்சரிக்கிறது சாஸ்திரம்.  

Tap to resize

Latest Videos

வாஸ்து சாஸ்திரத்தின்படி, நமது வீட்டின் உட்புறத்திலும் சரி வீட்டை சுற்றியும் நடக்கூடாதாக சில செடிகள் மற்றும் மரங்கள் உள்ளன. ஏனெனில் வீட்டிற்குள் வைக்கப்படும் தவறான செடிகள் எதிர்மறை சக்திகளை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.  இதனுள் அறிவியல் பூர்வமான உண்மைகளும் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்றும் முன்னோர்கள் பல்வேறு நூல்களில் தெரிவித்துள்ளனர். 

வீட்டிற்கு முன்பு வளர்க்க கூடாத செடிகள் என்னவென்றால், ரோஜா, கற்றாழை, அரளி, சீதாப்பழம், முருங்கை, வாழை, தென்னை போன்ற செடிகளை வளர்க்க கூடாது என்பார்கள். முள் இருக்கும் செடிகளை வளர்ப்பதால் வீட்டில் உள்ளவர்களிடையே தேவையில்லாத வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வீட்டில் தரித்திரம் நீங்க! முதல்ல இந்த 1 காரியம் செய்து பாருங்க! செல்வம் குவிந்து கொண்டே இருக்கும்..

 

அதேபோல போன்சாய் மரங்களும் வளர்க்கக்கூடாது. அரளிச்செடி தோட்டம், வீட்டின் பின்புறம் போன்ற பகுதிகளில் வைத்து வளர்க்கலாம். வீட்டின் முன்னால் அரளிச் செடி வளர்ப்பவர்களுக்கு அக்கம் பக்கத்தினர் ஆதரவும், நட்பும் பிரச்சனையாகவே எப்போதும் இருக்கும். பருத்தி செடிகளை வீட்டை சுற்றியும் வளர்ப்பதும் தவறானது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பணத்தை மிச்சம் பண்ண முடியலயா? துளசி செடியை இந்த இடத்தில் வச்சு பாருங்க! வீட்டில் பணமழை தான்!

click me!