எடப்பாடி-ஸ்டாலின்..! ஆயிரக்கணக்கில் கூடி எதிர்த்தாலும்.. ஒருத்தராவது பாதித்ததை நிரூபிக்குமா திமுக..?

thenmozhi g   | Asianet News
Published : Feb 19, 2020, 12:45 PM IST
எடப்பாடி-ஸ்டாலின்..! ஆயிரக்கணக்கில் கூடி எதிர்த்தாலும்.. ஒருத்தராவது பாதித்ததை நிரூபிக்குமா திமுக..?

சுருக்கம்

சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்ட போது போலீஸாருக்கும்போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

எடப்பாடி-ஸ்டாலின்..! ஆயிரக்கணக்கில் கூடி எதிர்த்தாலும்.. ஒருத்தராவது பாதித்ததை நிரூபிக்குமா திமுக..?  

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் திரளாக திரண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்ட போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் இதனை சாதகமாக பயன்படுத்திய திமுக மேலும் தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாம் மக்களிடையே தூண்டுதலை ஏற்படுத்தும் விதமாக சிஏஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு ஆங்காங்கு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடியுரிமை திருத்த சட்டத்தால் யாரேனும் தமிழகத்தில் பாதித்து இருக்கிறார் என்றால் ஒருவரை காண்பியுங்கள் பார்க்கலாம் என ஆவேசமாக பேசி இருந்தார். அந்த வகையில் இன்று என்னதான் சிஏஏ- வுக்கு எதிராக இவ்வளவு பேர் திரளாகக் கூடி எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும் அந்த எதிர்ப்பில், இந்த சட்டத்தால் பாதிப்பு வரும் என எதிர்கிறார்களே தவிர இதுவரை இந்த சட்டத்தால் பாதிக்கப் பட்டவர்கள் எவரும் இல்லை என்பதை உணரும் வகையில் அமைந்துள்ளது தற்போதைய  தருணம்.

மேலும் அவ்வாறு பாதித்து  இருந்தால் எந்த வகையில் பாதித்து உள்ளனர் என தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கு எதிர்க் கட்சியான  திமுக பதில் கொடுக்குமா..? 

இந்த சட்டத்தால் யாரேனும் ஒருவராவது பாதிக்கப்பட்டு உள்ளனர் என நிரூபணம் செய்யுமா  திமுக என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் போராட்டம் மட்டும் வலுக்கிறது. இந்த போராட்டத்தின் முடிவு தான் என்ன என்பது பற்றி இதுவரையிலும் ஒன்றும் புலப்படவில்லை 

மேலும் திருத்தப்பட்ட குடி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வங்கதேசம் கேரளா ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் சிஏஏ -க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என குரல் எழுப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Kitchen Tips : மிக்ஸி ஜாரில் பூண்டு, வெங்காயம் அரைத்த வாசனை போகலயா? நொடியில் நீங்க சூப்பர் டிப்ஸ்!
Blood Clot : இரத்தக் கட்டை வலியில்லாமல் 'குணமாக்கும்' சூப்பரான வீட்டு வைத்தியங்கள்!! ட்ரை பண்ணி பாருங்க