மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமைத்த உணவை ஆண்கள் சாப்பிட்டால் நாயாக பிறப்பார்கள்.!?சாபமிடும் சாமியார்.

Published : Feb 18, 2020, 10:30 PM IST
மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமைத்த உணவை ஆண்கள் சாப்பிட்டால் நாயாக பிறப்பார்கள்.!?சாபமிடும் சாமியார்.

சுருக்கம்

பெண்கள் மாதவிடாய் நாள்களில் கணவருக்காக உணவை சமைத்தால், அடுத்த பிறவியில் அவர்கள் பெண் நாயாகத்தான் பிறப்பார்கள் என சுவாமி கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி  பெண்களுக்கு சாபமிட்டிருக்கிறார்.

T.Balamurukan

பெண்கள் மாதவிடாய் நாள்களில் கணவருக்காக உணவை சமைத்தால், அடுத்த பிறவியில் அவர்கள் பெண் நாயாகத்தான் பிறப்பார்கள் என சுவாமி கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி  பெண்களுக்கு சாபமிட்டிருக்கிறார்.

கடந்த 11-ஆம் தேதி பூஜ் பகுதியில் ஸ்ரீ சகஜானந்த் பெண்கள் கல்வி நிறுவனத்தின் விடுதியில் தங்கியிருக்கும் பெண்களில் மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் யார்? என்பதை அறிய அங்கு தங்கியிருந்த 68 பெண்களும் உள்ளாடைகளை நீக்கி சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் உலகத்தையை உலுக்கியது. இதுதொடர்பாக மாணவியர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மாநில மற்றும் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் கல்லுரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

குஜராத் மாநிலம், பூஜ் பகுதியில் உள்ள சுவாமி நாராயண் கோயிலைச் சேர்ந்த சுவாமி கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி பேசும் ஆன்மீக சொற்பொழிவுகள் பல ஆடியோவில் பதிவேற்றப்பட்டது.அந்த வீடியோவில் பேசிய பேச்சு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அவர் பேசிய ஆடியோ பதிவில் பேசிய பதிவுகளில் சில...,

"மாதவிடாய்க் காலத்தில்  பெண்கள் சமைத்த உணவை,  ஆண்கள் உண்டால் அடுத்த பிறவியில் காளை மாடுகளாக, நாய்களாக பிறப்பார்கள். இவையனைத்தும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.மாதவிடாய் நாள்களில் கணவருக்காக உணவைச் சமைத்தால் பெண்கள் நிச்சயம் அடுத்த பிறவியில் பெண் நாய்களாகத்தான் பிறப்பார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.மாதவிடாய் நாள்கள் என்பது தவமிருப்பது போன்றது, என்பதைப் பெண்கள் உணரமாட்டார்கள்.இதை உங்களிடம் சொல்வதற்கு எனக்கும்கூட விருப்பம் இல்லை. ஆனால், நான் உங்களை எச்சரிக்க வேண்டும். ஆண்கள் சமைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு அது உதவும்" என்றார்.

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்