"மாத சம்பளம்" வாங்கிய உடன் இதைத்தான் முதலில் செய்யணும்...! இல்லையென்றால் "வீண் செலவு" தான்..!

 
Published : Jun 04, 2018, 05:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
"மாத சம்பளம்" வாங்கிய உடன் இதைத்தான் முதலில் செய்யணும்...! இல்லையென்றால் "வீண் செலவு" தான்..!

சுருக்கம்

what we should do if we get monthly salary

நாம் என்னதான் சம்பாதித்தாலும். நம் கையில் காசு தங்கவே தங்காது..இதனை நீங்கள் யாரவது யோசனை செய்து பார்த்து உள்ளீர்களா..?

ஆம்..எந்த ஒரு செயலும்  நன்றாக நடைப்பெற வேண்டுமானால் எதனையும் நாம்  சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் அல்லவா..?

ஒரு சிலவற்றிற்கு ஒரு சில ஐதீகம்  இருக்கும்...அந்த வகையில் மாதம் தோறும் சம்பளம் வாங்கும் நாம் ..சம்பளம் வாங்கிய உடன் என்ன செய்ய வேண்டும் ..என்ன செய்ய கூடாது என்பதை இப்போது பார்க்கலாம்...

மேலும் சம்பளம் வாங்கிய உடன், அதில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து விட  வேண்டும் என சொல்கிறது ஐதீகம்..

விரைய செலவுகள் கட்டுக்குள் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்..?

நாம் என்னதான் பணம் சம்பாதித்தாலும், செலவு மேல் செலவு ஆகும் அல்லவா..?

இதனை சரி செய்ய, ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வந்தால்,விரைய செலவுகள் கட்டுக்குள் வரும்

இஷ்ட தெய்வத்திற்கு  எண்ணெய் வாங்கிக் கொடுங்கள்....

மாத சம்பளம் வாங்கிய உடன், குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திற்கு ஒரு லிட்டார் எண்ணெய் அல்லது நெய் வாங்கி கொடுப்பது  நல்லது.

இதன் மூலம் வருமானம் நிலைக்கும்... 

மகாலக்ஷ்மிக்கு மல்லிகை...!

சம்பளம் வாங்கிய உடன், மகாலட்சுமிக்கு உகந்த மல்லிகை பூக்களை வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்து வந்தால் ஆக சிறந்தது...அஷ்ட லட்சுமியும் நம் வீட்டில் குடி  இருப்பாள்.

சம்பளம் கிடைத்த உடன்  வீட்டிற்கு இனிப்புகளை வாங்கி செல்லுங்கள்..

அவ்வாறு வாங்கிய இனிப்புகளை முதலில் நீங்கள் உண்டு பின்னர் மற்றவர்களுக்கு  கொடுப்பது நல்லது

இவ்வாறு செய்து வந்தால், செல்வம் மென் மேலும்  பெருகுமாம்....

கல் உப்பு

இதே போன்று, மறக்காமல் கல் உப்பை வாங்கி சமையல் அறையில் முதலில், வைத்து  விடுங்கள்...ஏன் என்றால் அதில் தான் மகாலட்சுமி குடி இருக்கிறாள்....

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்