குழந்தைங்க அமரும் 'பொசிஷன்' ரொம்ப முக்கியம்!! இப்படி உட்காந்தா கண்டிப்பா மாத்தனும்

இந்த பதிவில் உங்கள் குழந்தை 'w' வடிவில் உட்காருவதால் சில குறைபாடுகள் ஏற்படும். அது என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

what is W sitting and why it may cause problems for kids  in tamil  mks

Why 'W' Sitting Is Bad For Kids  : ஒவ்வொரு பெற்றோரின் மிகப்பெரிய கடமைகளில் ஒன்றுதான் குழந்தைகளை சரியாக மற்றும் ஆரோக்கியமாக வளர்ப்பது தான். ஏனெனில் குழந்தைகளை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மேலும் குழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும் பெற்றோர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அந்தவகையில், உங்களது குழந்தை 'w' வடிவில் உட்கார்ந்தால் அதை சரியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில், இது ஒரு நல்ல பழக்கம் அல்ல. இது குழந்தையின் உடல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் தெரியுமா? மேலும் இந்த நிலையில் உட்காருவது இடுப்பு, முழங்கால் மற்றும் கீழ் முதுகில் அதிகப்படியான அழுத்ததை ஏற்படுத்திவிடும். இதனால் குழந்தை அசெளகரியமாக வலி  மற்றும் நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்பதை குறித்து இங்கு காணலாம்.

டிஸ்ப்லாசியாவின் ஆபத்து:

Latest Videos

உங்கள் குழந்தை 'w' வடிவில் உட்கார்ந்தால் டிஸ்ப்லாசியாவால் பாதிக்கப்படுவார்கள். டிஸ்ப்லாசியா என்பது இடுப்பு மூட்டு சரியாக உருவாகாத நிலையைதான் குறிக்கிறது. இதனால் குழந்தைகள் நொண்டி நொண்டி நடப்பார்கள். மேலும் வலி மற்றும் நடப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். இந்த பிரச்சினை அதிகரித்தால், முடிவில் அறுவை சிகிச்சை கூட செய்ய முடியாமல் போய்விடும்.

இதையும் படிங்க:  பச்சிளம் குழந்தைக்கு 6 மாசத்துக்கு முன் தண்ணீர் கொடுக்கக் கூடாதுனு சொல்றது ஏன் தெரியுமா?

முழங்கால் பிரச்சனை:

குழந்தை 'w' நிலையில் உட்காருதலின் மற்றொரு பாதிப்பு என்னவென்றால், முழங்கால் பிரச்சனைக்கு வழிவகுக்கும். இந்த நிலையில் உட்காருதல் மூட்டுகளில் அதிக அழுத்தம் மற்றும் முழங்கால் காயங்களில் அபாயத்தை அதிகரிக்க செய்யும். மேலும் இந்த நிலையானது உங்கள் குழந்தையின் கற்றல் மற்றும் விளையாட்டு திறனை பாதிக்கச் செய்யும்.

இதையும் படிங்க:  பெற்றோர் கண்டிப்பாக தெரிஞ்சுக்கனும்!!  குழந்தைகள் முன் டிரஸ்  மாற்றக்கூடாது - ஏன் தெரியுமா? 

அறிவாற்றல் திறன் பாதிக்கப்படும்:

'w' நிலையில் உட்காருதல் குழந்தையின் அறிவாற்றல் திறன் மற்றும் கற்றல் சிரமங்களில் அதிக ஆபத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் இந்த நிலையில் உட்காரும்போது உடல் செயல்பாடு மூளை வளர்ச்சி, நினைவகம் கவனம் மற்றும் கற்றல் திறன் பாதிக்கும்.

பெற்றோர் என்ன செய்யணும்?

- பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்க முயற்சி செய்யுங்கள். குழந்தைகள் சுறுசுறுப்பாக விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும். முக்கியமாக குழந்தைகளை 'w' நிலையில் உட்காருவதை தவிர்க்க வேண்டும்.

- குழந்தை நீண்ட நேரம் 'w' வடிவில் உட்கார்ந்தால், அவர்களை நடனமாடுவது, யோகா செய்வது போன்ற உடல் செயல்பாடுகளில் ஊக்குவிக்க வேண்டும்.

- மேலும் குழந்தைகளுக்கு அவர்களது வயதிற்கு இருக்க பொம்மைகளை வாங்கி கொடுங்கள். அதுபோல கற்றலை ஊக்குவிக்கும் இடத்தை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுங்கள்.

vuukle one pixel image
click me!