படுக்கையறையில் "கசமுசா"..! தாம்பத்யத்தில் "ஜல்சா" பண்ணமுடியாமல் போவது ஏன் தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Jan 26, 2020, 3:08 PM IST
Highlights

சந்தோஷமான பாடல்களை போடாமல் அழுது வடியும் பாடல்களோ, இசையோ உங்களை மூட் அவுட் ஆக்கி விடும். சூழ்நிலைக்கு ஏற்றார் போல பாடல்கள் இருந்தால் அதுவே உங்களை குஷியாக்கி விடும்.

படுக்கையறையில் "கசமுசா"..! தாம்பத்யத்தில் "ஜல்சா" பண்ணமுடியாமல் போவது ஏன் தெரியுமா..? 

கல்யாணம் ஆன புதியதில், தேனிலவுக்கு போகும் போது தான் யாருடைய தொந்தரவும் இல்லாமல் மனைவியுடன் நிம்மதியாக இருக்க முடியும். குழந்தைகள் பிறந்து விட்டால், மனைவியும் – கணவனும் படுக்கையறையில் பேச கூட நேரம் கிடைப்பதில்லை. வாய்ப்புக்காக ஏங்கி காத்திருக்கும், கிடைக்கிற வாய்ப்பிலும் மூட் ஆக்கும் விசயங்கள் எரிச்சலடைய செய்யும்.
தொந்தரவு செய்யும் செல்போன்கள் 

இரவில் தான் மனைவியுடன் பேச முடிவதில்லை. அலுவலகத்தில் அனைவரையும் சமாளித்து அனுமதி வாங்கி நேரத்திற்கு வந்தால், அடிக்கடி தொலைப்பேசிகள் அழைப்புகள் பாடாய் படுத்தும். இது போன்ற முக்கியமான நேரங்களில் செல்போன்களை ஆஃப் செய்து வையுங்கள்.

உடல் உபாதைகள்

முத்தம் கொடுக்க அருகில் வரும் போது சளி, தலைவலி போன்ற உடல் உபாதைகள் கணவன்- மனைவியை இரு வேறு துருவங்களாக பிரிக்கும். இது மிகப்பெரிய சங்கடத்தை உண்டு்ப்பண்ணும்.

சோக பாடல்கள் வேண்டாமே

சந்தோஷமான பாடல்களை போடாமல் அழுது வடியும் பாடல்களோ, இசையோ உங்களை மூட் அவுட் ஆக்கி விடும். சூழ்நிலைக்கு ஏற்றார் போல பாடல்கள் இருந்தால் அதுவே உங்களை குஷியாக்கி விடும்.

கதவை தட்டி தொல்லை கொடுப்போர் சங்கம்

வீட்டை கவனித்துக் கொள்ள வாட்ச்மேன் வைத்தால், அவர் உங்களை தொந்தரவு செய்வதையே முழு நேர வேலையாக வைத்திருப்பார். மற்ற நேரத்தில் அமைதியாக இருந்து விட்டு, நேம் கெட்ட நேரத்தில் வந்து கதவை தட்டும் போது வரும் மூட் அவுட் கோபத்தின் உச்சத்துக்கே போய் விடும். 

இடைவெளியால் கவனக்குறைவு

பெரிய இடைவெளி விட்டதால் கவனக்குறைவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உடலுறவில் யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்படக் கூடும். என்ன தான் அளவுக்கடந்த ஆசையாக இருந்தாலும், மூட் அவுட் ஆகி நடையை கட்ட வேண்டியது தான்.

புதிய முயற்சி சொதப்பலாம் 

எதையாவது படித்து விட்டு, வித்தியாசமாக முயற்சி செய்கிறேன் என அது ஜெயிக்காமல் போனால், உங்கள் துணை சும்மா விட மாட்டார்கள். அடுத்த ரவுண்ட பார்த்து கொள்ளலாம் என்ற பேச்சுக்கே வாய்ப்பில்லை ராசா.

சாப்பிட மறந்துட்டோமே

அவசரமாக எல்லாம் மாஸ்டர் பிளான் பண்ணாலும், படுக்கையறைக்கு போன பின்பு மனைவி நெருங்கி வரும் நேரத்தில் தான் பசி வயிற்றை கிள்ளும். அப்புறம் என்ன யாரு யாரை திட்டுவார்கள் என சொல்லி தெரிய வேண்டியதில்லை. மூட் அவுட் உச்சத்துக்கே போய் தட்டு பறக்கும். 

ஸ்கூல் பிள்ளை மாதிரி சிறுநீர் போக தோன்றும் 

உடலுவுக்கு முந்தைய விளையாட்டு எல்லாம் நல்லா தான் நடந்தது. ஆனால் அப்போது தான் சிறுநீர் போக வேண்டும் என உங்கள் துணை சொல்லும் போது வரும் கோபம் இருக்கே, அது வேற லெவல். அப்புறம் என்ன ஆளுக்கு ஒரு மூலையில் படுக்க வேண்டியது தான்.

பயத்தில் அழும் குழந்தை

அப்பா அம்மாவை ஊருக்கு அனுப்பியாச்சு. இரவு வேலைக்கும் விடுமுறை வாங்கியாச்சு. வாட்மேனுக்கு விடுமுறை குடுத்தாச்சு. குழந்தையும் தூங்க வச்சாச்சு. இப்படி எவ்ளோ தான் பிளான் போட்டாலும், திடீரென குழந்தை எழுந்து பயமா இருக்கு நான் இன்னைக்கு அம்மாக்கூடத் தான் தூங்குவேன் என சொல்லும் போது, அங்கே பேச்சே வராது. உங்கள் தொண்டையை அடைக்கிற துக்கம் விடியும் வரைக்கும் நிச்சயம் இருக்கும்.

click me!