அடுத்த ஆப்பு..! ஆதார் அல்லது பான் எண் இணைக்காவிட்டால் 20 சதவீத வரி பிடிக்கப்படும்..! முழு விவரம் உள்ளே..!

By ezhil mozhiFirst Published Jan 26, 2020, 2:16 PM IST
Highlights

நிகர வருவாய் 2,50,000 ரூபாய்க்கு அதிகமாகக் கொண்ட அனைவரும் கண்டிப்பாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். ஒட்டுமொத்த வருவாயில் பிரிவு 80சி- வருமான வரிச் சட்டப்பிரிவுகளில் கிடைக்கும் சலுகைகளை தவிர எஞ்சும் தொகை நிகர வருவாய் எனப்படுகிறது. 

அடுத்த ஆப்பு..! ஆதார் அல்லது பான் எண் இணைக்காவிட்டால் 20 சதவீத வரி பிடிக்கப்படும்..! முழு விவரம் உள்ளே..! 

சம்பளம் பெறுபவர்கள் வருமான வரி கணக்கில் ஆதார் அல்லது பான் எண் இணைக்காவிட்டால், 20 சதவீத வரி பிடிக்கப்படும் என வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. 

நிகர வருவாய் 2,50,000 ரூபாய்க்கு அதிகமாகக் கொண்ட அனைவரும் கண்டிப்பாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். ஒட்டுமொத்த வருவாயில் பிரிவு 80சி- வருமான வரிச் சட்டப்பிரிவுகளில் கிடைக்கும் சலுகைகளை தவிர எஞ்சும் தொகை நிகர வருவாய் எனப்படுகிறது. 

இந்தியாவில் வருமானம் ஈட்டும் ஊழியர்களிடம் வசூலிக்கப்படும்  டிடிஎஸ்  எனப்படும் வருமான வரி பிடித்தம், ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட்டு, நிதியாண்டு நிறைவு பெற்றவுடன் அத்தொகையை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் விண்ணப்பித்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அதில் சில வரிச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இந்த வருமான வரிக்கணக்கில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களது பான் எண்ணை இணைத்திருக்க வேண்டும். அவ்வாறு பான் எண்  இணைக்கப்படாவிட்டால் அவர்களது ஆதார் எண் இணைக்கப்படுவது கட்டாயமாகும்.

இந்நிலையில் தற்போது வருமான வரித் துறையின் கீழ் செயல்படும் நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதார் கட்டாயமாக்கபடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் பான் எண் இணைக்கப்படுவது கட்டாயமாக இருக்கும் நிலையில் ஆதார் எண் இணைக்கப்படுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இரண்டையும் இணைக்காத வாடிக்கையாளர்களின் சம்பளத்திலிருந்து அபராதமாக 20 சதவீத வரி பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, பான் எண் இல்லாத நபர்கள் ஆதாரை இணைக்கலாம் என்ற விதிமுறை அறிவிப்பு வெளியானது. பான் எண் இல்லாத நபர்கள் தங்களது ஆதார் எண்ணை வழங்கினால் அதிலிருந்து தானியங்கி முறையில் பான் எண் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இன்னும் சில தினங்களில் 2020-21 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், வருமான வரி செலுத்துவோருக்கு சில வரிச் சலுகைகள் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால் தற்போது வருமான வரி செலுத்தும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சுமை ஏற்படுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கையை வருமான வரித் துறை மேற்கொண்டுள்ளது. 

கடந்த ஆண்டு முதலே இந்தியப் பொருளாதார வளர்ச்சி பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 5 சதவீதமாகக் குறைந்த இந்தியப் பொருளாதாரம், அதைத் தொடர்ந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இன்னும் மோசமாக 4.5 சதவீதமாகக் குறைந்தது. இந்த ஆண்டின் எஞ்சிய காலாண்டுகளிலும் வளர்ச்சி மந்தமாகவே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. 2020-21 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மத்திய மோடி அரசு இருக்கிறது.

அரசின் செலவுகள் ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் மறுபுறம் அரசின் வரி வருவாய் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த ஆண்டில் மொத்தம் ரூ.24.59 லட்சம் கோடி வரி வசூல் செய்ய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், அதில் ரூ.2.5 லட்சம் கோடி குறைவான அளவிலேயே வரி வசூல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வரி வருவாயை உயர்த்தும் நடவடிக்கைகளில் அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

click me!