
சமையலில் இஞ்சி மற்றும் பூண்டு இவை இரண்டும் மிகவும் முக்கியமானவை. இவை இரண்டும் உணவுக்கு சுவையையும், மணத்தையும் கொடுப்பது மட்டுமில்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கும். பல உணவுகளில் இவை பயன்படுத்தப்பட்டாலும், அசைவ உணவுகளில் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.
பல உணவுகளின் முதுகெலும்பாக இருக்கும் இஞ்சி மற்றும் பூண்டு விழுதை ஒப்பீடுகையில், புதிதாக நறுக்கி இஞ்சி மட்டும் பூண்டு தான் வித்தியாசமான சுவையை தரும். இஞ்சி மற்றும் பூண்டு உணவை செழிக்கவும், கெட்ட கொழுப்பு மற்றும் பித்தத்தை குறைக்கவும் உதவும். சரி இப்போது இந்த பதிவில் உணவில் இஞ்சி, பூண்டு எதற்கு, எப்போது, எப்படி சேர்க்க வேண்டுமென்று தெரிந்துகொள்ளலாம்.
இந்த உணவுகளில் இஞ்சி, பூண்டு சேர்க்கலாம் :
1. இறைச்சி
ஆட்டு குழம்பு வைக்கும் போது இஞ்சி மற்றும் பூண்டை அரைத்து சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கண்டிப்பாக இஞ்சி தட்டி போட வேண்டும். இப்படி தட்டு போட்டால் ஆட்டிறைச்சி சீக்கிரமாகவே வெந்துவிடும். கெட்ட கொழுப்பும் உடம்பில் சேராது.
2. மைசூர் சட்னி
கடலை மாவை கரைத்து அதனுடன் பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து பிறகு தாளித்து செய்யப்படும் சட்னி தான் மைசூர் சட்னி. இந்த சட்னியுடன் இஞ்சி பூண்டு சேர்த்தால் குருமா சுவையில் இருக்கும். சாப்பிடுவதற்கு ரொம்பவே அருமையாக இருக்கும்.
இந்த சட்னியை மதுரையில் டீக்கடை வடை, பஜ்ஜி, போண்டாக்களுக்கு தருவார்கள். குழம்புப் பதத்தில் இருப்பதால் வடை போண்டா சீக்கிரமாகவே ஊறி விடும். இதனால் சீக்கிரமாகவே சாப்பிட்டு முடித்து விடலாம். நேரமும் வீணாகாது. அதிகமாக சாப்பிட தோன்றும். அந்த அளவிற்கு இந்த மைசூர் சட்னி சுவையாக இருக்கும்.
நன்மைகள் :
- இஞ்சி மற்றும் பூண்டில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
- செரிமானத்திற்கு உதவும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
- சளி மற்றும் இருமல் பிரச்சனைக்கு நல்லது.
- உடலுக்கு தேவையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்கும்.
இவற்றில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்காதே!
பூண்டு
வாழைக்காய் கறி, உருளைக்கிழங்கு செய்யும் போது பூண்டு பெருஞ்சீரகம் கட்டி தாளித்து போட வேண்டும். பூண்டில் தான் கிழங்குகளால் ஏற்படும் வாய்வை முறிக்கும் தன்மையுள்ளன.
பூண்டு குழம்பு
பூண்டின் தோலை உரித்து சின்ன வெங்காயத்தையும் உரித்து, பிறகு மஞ்சள் மல்லி, சீரகம், மிளகு ஆகவற்றை பேஸ்ட் போலாக்கி நல்லெண்ணெய் ஊற்றி பூண்டு குழம்பு கெட்டியாக செய்யப்படும் இந்த குழம்பு உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவும்.
மேலும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு வாரத்திற்கு இரண்டு முறை இந்த குழம்பு செய்து கொடுப்பது ரொம்பவே நல்லது. அதுபோல பூண்டை சிறியதாக நறுக்கி நல்லெண்ணெயில் வதக்கி சாப்பிட கொடுக்கலாம். பிறகு சுடுதண்ணீரும் குடிக்க கொடுப்பர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.