வீட்டில் ஹோமம் எதற்கு ?  வருடத்தில் ஒரே ஒரு முறை...மறக்காதீங்க..!

First Published Apr 23, 2018, 9:37 AM IST
Highlights
what is the necessary of homam?


வீட்டில் ஹோமம் எதற்கு ?  வருடத்தில் ஒரே ஒரு முறை....மறக்காதீங்க..!

வருடத்திற்கு ஒரு முறையாவது மறக்காமல்  நாம் ம் வாழும் வீட்டில் ஹோமம்  செய்ய  வேண்டும் என்பது ஐதீகம்

இவ்வாறு செய்யும் போது சகல நன்மைகள்  நம்மை வந்தடையும்...நம் வீட்டை சுற்றி பல  பாசிட்டிவ் வைப்ரேஷன் கண்டிப்பாக இருக்கும்

ஹோமம் என்றால் என்ன ?

பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதைத்தான் ஹோமம் என்கிறோம்.

அக்னி இவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் இவற்றின் சாரத்தை அந்தந்த தேவதைக்கு அனுப்பி வைக்கின்கிறன என்பது காஞ்சி மகாப் பெரியவரின் மகாவாக்கு என்பது குறிப்பிடத்தக்கது 

தேவர்கள்

நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித் தருகின்றனர், தேவர்கள்.

மழை

கடலிலுள்ள நீர் ஆவியாகி மீண்டும் மழையாகப்பொழிந்து வரும் சுழற்சியைப் போன்றதுதான் இந்த ஹோமங்கள்.

நமக்கு அருகேயுள்ள சக்திகளை தொடர்பு கொள்ள வைக்கும் விதம்தான் மந்திரப்பூர்வமான ஹோமங்கள்.

மந்திரங்களால் நிறைந்த பிரதேசங்களின் அலைவரிசை நம் மனதிற்கு பலத்தைக் கொடுக்கிறது. எங்கேயோ தடைபட்டிருந்த சக்திகளை மந்திர ரூபமாக உள்ள தேவர்கள் அகற்றுகின்றனர்.

பூமியில் உட்கார்ந்து கொண்டு அண்டத்திலுள்ள செயற்கைகோளை சரி செய்வதுபோன்ற ஒரு செயலை ரிஷிகள் அநாயாசமாக அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமாகும் விதமாக ஹோமங்களாக வடிவமைத்துக் கொடுத்துள்ளனர்.

எனவே ஹோமம் எந்த அளவிற்கு  புனிதமான ஒன்று என்பதை நன்கு புரிந்துகொண்டு அதன்படி ஆண்டுக்கு ஒரு முறையாவது ஹோமம் செய்வது நல்லது

ஸுதர்ஸனாய ஸ்வாஹா... என்றால் அங்கு சக்கரத்தாழ்வார் வரவேண்டும், இது வேதத்தின் சத்தியக் கட்டளை.

அழைக்கும்போதே அனுக்கிரகத்தோடு வரும் கருணை. இது, மனிதர்கள் தாங்கள் தனித்தவர்கள் அல்ல. தங்களைச் சுற்றிலும் பல்வேறு சக்திகள் இயக்கியும், இயங்கியபடியும் உள்ளன என்பதன் சூட்சுமமும் உள்ளது. எனவே, இன்ன ஹோமம் செய்தால் இன்ன பலனை கொடுத்தே தீருவார்கள்.

ஆதலால் அனைத்து இல்லங்களிலும் வருடத்திற்கு ஒரு முறையேனும் ஹோமம் செய்வோம்

click me!