பெண்களே.. இளம் வயதிலேயே மாதவிடாய் நின்றுவிடுகிறதா? இதுவும் காரணமாக இருக்கலாம் - டாக்டர்ஸ் அட்வைஸ்!

Published : Oct 13, 2023, 12:02 AM IST
பெண்களே.. இளம் வயதிலேயே மாதவிடாய் நின்றுவிடுகிறதா? இதுவும் காரணமாக இருக்கலாம் - டாக்டர்ஸ் அட்வைஸ்!

சுருக்கம்

இந்த வகை பிரச்சனைகள் பொதுவாக 20 முதல் 40 வயதிற்குட்பட்ட தாய்மார்களிடமோ அல்லது அவர்களது குடும்பத்தில் மனச்சோர்வின் போன்ற பிரச்சனைகளை கொண்ட பெண்களிடம் தான் அதிக அளவில் காணப்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

ஒவ்வொரு பெண்ணும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வழக்கமான மாதவிடாய் என்பது மிகவும் முக்கியமானது. மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்றதாக இருந்தால், பிசிஓஎஸ் போன்ற பிரச்சினைகள் எழுகின்றன, அதை அலட்சியம் செய்வது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

பெண்களில் மாதவிடாய் பொதுவாக 12 முதல் 14 வயதிற்குள் தொடங்குகிறது. அதே போல பொதுவாக மாதவிடாய் 46 முதல் 50 முதல் 55 வயதுக்குள் நிற்க வாய்ப்புகள் உள்ளது என்று கருதப்பட்டாலும், சில உடல் ரீதியான பிரச்சனைகளால் பெண்களுக்கு முன்கூட்டியே மாதவிடாய் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றன. இதுபோன்ற அறிகுறி உள்ள பெண்களுக்கு அதிக உடல் சம்மந்தமான நோய்கள் வர வாய்ப்புள்ளது.

பெண்களே! தப்பி தவறி கூட இந்த நாளில் தலைக்கு குளிச்சிடாதீங்க; லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாவீர்கள்..!!

சரி இதற்கான காரணிகள் என்ன?

அதன் காரணங்களுக்கு இன்னும் துல்லியமான ஆராய்ச்சி இல்லை என்றாலும், பெண்களில் முன்கூட்டியே மாதவிடாய்நிற்பதற்கு உளவியல் ரீதியாக சில காரணங்கள் இருக்கலாம். இந்த பிரச்சனை பொதுவாக 20 முதல் 40 வயதிற்குட்பட்ட தாய்மார்களிடமோ அல்லது அவர்களது குடும்பத்தில் மனச்சோர்வின் வரலாற்றைக் கொண்ட பெண்களிடமோ காணப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

உங்களுக்கு PMS பிரச்சனை இருந்தால், நீங்கள் உடல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக பாதங்களில் வலி, முதுகுவலி, அடிவயிற்றில் தசைப்பிடிப்பு, முகப்பரு, எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதே சமயம் அமைதியின்மை, மறதி, கோபம், எரிச்சல், மனநிலை மாற்றங்கள் போன்ற மனப் பிரச்சனைகளும் காணப்படுகின்றன.

ஆகவே இதனை தயவு செய்து அலட்சியப்படுத்தாமல், உடனே உரிய மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும். அதே நேரத்தில் மனதையும் உடலையும் அமைதியாக வைத்துக்கொள்ள செய்யவேண்டிய அனைத்து விஷயங்களையும் பெண்கள் செய்யவேண்டும்.

உங்கள் உறவில் ரொமான்ஸை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் டிப்ஸ்.. தம்பதிகளே ப்ளீஸ் நோட்..

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்