முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி அணிந்திருக்கும் ரிச்சர்ட் மில்லே வாட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 30 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வாட்ச்சின் சிறப்பம்சங்கள் மற்றும் அது ஏன் விலையுயர்ந்தது என்பதைப் பற்றி இந்த கட்டுரை விளக்குகிறது.
ஆனந்த் அம்பானியின் Tourbillon Panda கைக் கடிகாரம்: உலக தொழில் அதிபர்களில் முன்னணி வகிக்கும் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி எப்போதும் வாட்ச் (கைக்கடிகாரம்) மீது ஆசை கொண்டவர். தற்போதும் அவர் அணிந்து இருக்கும் ஒரு வாட்ச் அனைவரின் பார்வையை இழுத்துள்ளது.
இந்தியாவின் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. சமீபத்தில் இவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் அனைவரின் பார்வையை ஈர்த்துள்ளது. இவர் மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் ரியல் எஸ்டேட் தொழிலை நடத்தி, ஜியோவின் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.
ஆனந்த் அம்பானியின் வந்தாரா
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவரது முயற்சியில் குஜராத் ஜாம்நகரில் அமைந்து இருக்கும் வந்தாரா விலங்குகள் மீட்பு மற்றும் பராமரிப்பு மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இங்கு அனாதையாக விடப்படும் விலங்குகள் முதல், அடிபட்டு பார்ப்பதற்கு யாரும் இல்லாத விலங்குகள் இந்த மையத்தில் வைத்து பராமரிக்கப்படும். இங்கு விலங்குகளுக்கு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் இந்த மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. விலங்குகள் என்றால் பிரியமாக கவனித்து வரும் ஆனந்த் அம்பானிக்கு கைக்கடிகாரத்தின் மீதும் ஆர்வம் உள்ளது. வகை வகையான கைக்கடிகாரங்கள் அணிந்து பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர்.
இவர் சமீபத்தில் ரிச்சர்ட் மில்லே RM 26-01 டூர்பில்லன் பாண்டா கடிகாரம் அணிந்து இருந்தார். இது உலகெங்கிலும் உள்ள கடிகார பிரியர்களை கவர்ந்த கடிகாரம் ஆகும்.
ஆனந்த் அம்பானியின் 30 கோடி மதிப்புள்ள கடிகாரம்
ரிச்சர்ட் மில்லே RM 26-01 டூர்பில்லன் பாண்டா சாதாரண கடிகாரம் என்று நினைத்து விடாதீர்கள். ஆனந்த அம்பானி அணிந்தாலே அதில் ஏதாவது சிறப்பு இருக்கும். இந்த கைக் கடிகாரம் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிகாரத்தின் மதிப்பு 30 கோடி ரூபாய்.
இந்தக் கடிகாரத்தின் சில்லறை விலை ரூ. 5.36 கோடியாகும், ஆனால், சந்தை மதிப்பு 30 கோடி ரூபாயாகும். தற்போது வரைக்கும் இந்த வகையான கடிகாரம் 30 மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. கைக் கடிகாரம் பிரியர்களுக்கு இந்த வாட்ச் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
டூர்பில்லன் பாண்டா வாட்ச் சிறப்பு என்ன?
Case: வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட 18kt வெள்ளை தங்கம்
Strap: நேர்த்தியான கருப்பு தோலால் ஆனது
Bezel:வைர கற்கள் பாதிக்கப்பட்டுள்ளது
Dial: வெள்ளி மற்றும் வைர மணிகளால் ஆனது. நீல வண்ண டயலில் மூங்கில் தளிர்களால் சூழப்பட்ட பாண்டா வடிவமைப்பு உள்ளது.
சீனாவின் பாண்டா
கையால் வரையப்பட்ட மூங்கில் இலைகள் கடிகாரத்திற்கு கூடுதல் அழகை கொடுக்கிறது. ரிச்சர்ட் மில்லே காலிபர் RM26-01 ஆல் இயக்கப்படும் இந்த கடிகாரத்தில் இரண்டு டூர்பில்லன் துணை டயல்கள் உள்ளன.
டயலில் இடம்பெற்றுள்ள பாண்டா சீனாவின் தேசிய சின்னமாக குறியீட்டைக் கொண்டுள்ளது, இது அழிந்து வரும் உயிரினங்களுக்கான பாதுகாப்பு முயற்சிகளைக் குறிக்கிறது. விலங்குகளின் வாழ்விடப் பாதுகாப்பிற்கான ஆனந்தின் அர்ப்பணிப்பை குறிக்கும் வகையில் இந்தக் கடிகாரம் அமைந்துள்ளது.