Ash Wednesday: சாம்பல் புதன்...புனித நாளாக கொண்டாடும் கிறிஸ்தவர்கள்! உக்ரைன் போர் முடிவுக்கு சிறப்பு பிராத்தனை

Anija Kannan   | Asianet News
Published : Mar 02, 2022, 10:47 AM ISTUpdated : Mar 02, 2022, 10:48 AM IST
Ash Wednesday: சாம்பல் புதன்...புனித நாளாக கொண்டாடும் கிறிஸ்தவர்கள்! உக்ரைன் போர் முடிவுக்கு சிறப்பு பிராத்தனை

சுருக்கம்

Ash Wednesday: சாம்பல் புதன் நாளான இன்று கிறிஸ்தவா்கள் அதிலும் குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் தங்களது நெற்றியில் சாம்பல் பூசி இயேசுவை வழிபடுவார்கள்.

சாம்பல் புதன் நாளான இன்று கிறிஸ்தவா்கள் அதிலும் குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் தங்களது நெற்றியில் சாம்பல் பூசி இயேசுவை வழிபடுவார்கள்.உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற இந்த சாம்பல் புதன் வழிபாட்டு நிகழ்வில் உக்ரைன் -ரஷ்யா போர் முடிவுக்கு வர ஏராளமான பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

இந்த நாளில் சாம்பல் புதன் பற்றியும் மற்றும் தவக்கால கொண்டாட்டத்தைப் பற்றியும் இங்கு பாா்க்கலாம்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் பிரிந்த நாட்களை  உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் அன்று புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3ம் நாள். ஈஸ்டர் பண்டிகையாகவும் உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டப்படுகிறது. கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் துவங்கியது.

ரோமில் வாழ்ந்த தொடக்க கால கிறிஸ்தவா்கள் தவக்காலத்தின் போது சாம்பலை ஒருவருக்கு ஒருவா் பூசிக்கொண்டனா். மத்திய காலத்திற்கு பின்புதான் சாம்பல் புதன் அன்று நெற்றியில் சாம்பல் பூசும் வழக்கம் வந்தது.


 
சாம்பல் புதன் என்றால் என்ன? 

சாம்பல் புதன் என்றால் பொதுவாக சாம்பலின் நாள் என்று கருதப்படுகிறது. சாம்பல் புதன் மனந்திரும்புதலின் நாளாகும். அந்த நாளில் கிறிஸ்தவா்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, கடவுளின் மேல் இருக்கும் பக்தியை வெளிப்படுத்துகின்றனா்.

சாம்பல் எங்கிருந்து கிடைக்கிறது?

பாரம்பாியமாக முந்தைய வருடம் குருத்து ஞாயிறு கொண்டாட்டத்தின் போது வழங்கப்படும் குருத்துக்களை சேகாித்து அதை எாித்து அதிலிருந்து கிடைக்கும் சாம்பலை சாம்பல் புதன் அன்று பயன்படுத்துவா். அந்த சாம்பலை பக்தா்களின் நெற்றியில் பூசுவதற்கு முன்பு ஆசீா்வதிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் உயிா்ப்பு (ஈஸ்டா்) பெருவிழாவிற்கு முந்தைய ஞாயிறு அன்று குருத்து ஞாயிறு கொண்டாடப்படும். 

இயேசு கிறிஸ்து தான் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக வெற்றி வீரராக பவனி வந்து யெருசலேம் நகருக்குள் நுழைவதைக் குறிக்கும் வகையில் குருத்து ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அவ்வாறு இயேசு யெருசலேமுக்குள் நுழையும் போது யெருசலேம் நகர மக்கள் தங்கள் கைகளில் குருத்துகளைப் பிடித்துக் கொண்டு அவற்றை அசைத்துக் கொண்டு இயேசுவை ஆரவாரமாக வரவேற்றனா் என்று சொல்லப்படுகிறது.

இதையொட்டி நாகை மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி காலை நடைபெற்றது.பேராலயத்தில் நடைபெற்ற 40 நாள் தவக்காலம் சிறப்புத் திருப்பலியில் பங்கேற்ற ஏராளமான கிறிஸ்தவர்களுக்கு அருட் தந்தைகள் நெற்றியில் விபூதி பூசினர். சிறப்பு திருப்பலியில் ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வந்து நாட்டு மக்கள் அமைதியாக வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Henna Hair Pack : நரைமுடியை கருப்பாக்க 'மருதாணி' கூட இந்த 1 பொருள் கலந்து யூஸ் பண்ணுங்க
Honey Benefits : தேன் யூஸ் பண்றதுக்கு முன்னால இந்த '5' விஷயங்களை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..