
தமிழ் சினிமாவில்..இரண்டு மாபெரும் நடிகர்கள் இடையே வசூலில் எப்போதும் போட்டி நிலவும், அந்த வகையில், தற்போது ப்ரான்ஸ் நாட்டில் மாஸ்டரை பின்னுக்கு தள்ளி வலிமை வசூலில் முன்னேறி சென்றுள்ளது.
ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற வலிமை திரைப்படம் உலகம் எங்கிலும், பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி வருகிறது.
போனிகபூர் தயாரிப்பில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.
இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2 ஆண்டு காத்திருப்புக்கு பின் இப்படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் பிப்ரவரி 24 அன்று உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியானது.
இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களின் பேராதரவை தொடர்ந்து வலிமை திரைப்படம் தமிழ்நாடு வசூலில் புதிய சாதனை படைத்திருந்தது. முதல் நாளிலேயே மார் ரூ. 36 கோடி வசூல் செய்து மாஸ்டர், அண்ணாத்த போன்ற படங்களின் சாதனைகளை இப்படம் முறியடித்திருந்தது.
தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர். ஏற்கனவே, விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்தின் சாதனையையும், வலிமை படம் முறியடித்துள்ளது. மேலும், இப்படத்தின் மற்ற வசூல் விவரங்கள் குறித்த விவரமும் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
அந்த வகையில், தற்போது தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மாபெரும் சாதனை புரிந்து வரும் வலிமை ப்ரான்ஸ் நாட்டில் முதல் வார இறுதியிலேயே 9000 Entry வந்துவிட்டது. ஆனால், மாஸ்டர் படம் உலகளவில் மிகப்பெரிய வசூல் நடத்தினாலும், ப்ரான்ஸ் நாட்டில் 400 Entry மட்டுமே வந்தது.
இதன் மூலம் மாஸ்டரை விட வலிமை பல மடங்கு அதிக வசூலை ப்ரான்ஸ் நாட்டில் கொடுத்துள்ளது. அதே நேரத்தில் மாஸ்டர் வந்த போது ப்ரான்ஸில் கரோனா தொற்றின் அபாயம் உச்சத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.