ஆவி பறக்கும் சூடான உணவில் எலுமிச்சை சாறு பிழியும் ஆளா நீங்கள்... அப்படி செய்யக் கூடாதாம்.. ஏன் தெரியுமா?

By Ma RiyaFirst Published Feb 22, 2023, 7:05 PM IST
Highlights

lemon juice on Hot food: எலுமிச்சை சாற்றை சூடான உணவில் பிழியலாமா? கூடாதா? முழுவிவரம் உள்ளே..! 

எலுமிச்சை பழங்கள் உணவின் சுவையை மேலும் கூட்ட பயன்படுத்தப்படுகின்றன. அசைவ உணவுகள் மீது கீறிவிட்ட எலுமிச்சை பழத்துண்டுகளை வைத்து சில உணவகங்களில் பரிமாறுவர். வீட்டில் சமைக்கும் அசைவ உணவுகளில் கூட எலுமிச்சையை பிழிந்து விடுவதை பார்த்திருப்பீர்கள். தித்திப்பான புளிப்போடு இருக்கும் எலுமிச்சையானது பெரும்பாலான உணவுகளின் சுவையை கொஞ்சம் தூக்கி காட்டுகிறது. 

எலுமிச்சை நன்மைகள்

Latest Videos

எலுமிச்சை பானங்கள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகின்றன. வைட்டமின் சி அதிகம் காணப்படும் இந்த பழங்கள் இறந்த செல்கள், நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இரும்புச்சத்து உடம்புக்கு கிடைக்கவும், சருமத்தை மென்மையாக்கவும் கூட எலுமிச்சை பயன்படுகிறது. இத்தனை சத்துக்கள் இருந்தாலும் இதை உணவில் பயன்படுத்தும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். 

பலர் ஆவி பறக்க பறக்க இருக்கும் சூடான உணவுகளில் கொண்டு சுவையை கூட்ட எலுமிச்சை சாறை பிழிந்துவிடுகிறார்கள். அவர்களிடம் இதை பற்றி கேட்டு பாருங்கள். உணவின் சுவையை வேற லெவலுக்கு கொண்டு வர பல ஆண்டுகளாக இப்படி பிழிந்துவிடுவதாக சொல்வார்கள். ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்களோ சூடான உணவின்மீது எலுமிச்சை சாறு பிழிவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். 

ஏன் பிழியக் கூடாது? 

உணவு சூடாக இருக்கும்போது அதன் மீது எலுமிச்சை சாறு விட்டால் உணர்திறன் அதிகமாக மாறும். அதில் இருக்கும் சத்துக்கள் முழுக்க சூட்டில் ஆவியாக மறைந்துவிடும். வைட்டமின் சி சத்தானது வெப்பம், வெளிச்சம் ஆகிய இரண்டினாலும் பாதிப்படையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது இந்த ஊட்டச்சத்துக்கள் வெறும் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலேயே அதிவிரைவில் சிதையும் பண்பு கொண்டவை. 

இதையும் படிங்க: இதை கவனிச்சிங்களா.. கொலஸ்ட்ரால் இருந்தா கை, கால் விரல்களில் வலியுடன் வரும் முக்கிய அறிகுறிகள்..

அதனால் தான் சூடான உணவு அல்லது சூடான தண்ணீரில் ஒருபோதும் எலுமிச்சையை சேர்க்க வேண்டாம் என சொல்லப்படுகிறது. அப்படி செய்தால் வைட்டமின், நொதிகளை முற்றிலும் அழித்துவிடும். 

இந்தக் கட்டுகதை தெரியுமா? 

காலையில் எழுந்து வெறும் வயிற்றில் வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது பலன் அளிக்கும் என்பதே கட்டுக்கதைதான். சில மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். எலுமிச்சை வெந்நீரில் செயலிழந்துவிடும் என்கிறார்கள். எலுமிச்சை பழத்தில் சிறந்த ஆண்டி ஆக்சிண்டான பிளவனாய்டுகள் எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலத்தில் காணப்படுகின்றன. இதனை வெந்நீரில் கலக்கும்போது உடலுக்கு ஒரு நன்மையும் கிடைக்காமல் போய்விடுகிறது. கவனமாக இருங்கள். 

இதையும் படிங்க: கருப்பு திராட்சை கண்டால் சாப்பிடாமல் விடாதீர்கள்.. அவ்வளவும் சத்துக்கள்..!

click me!