Weight Loss Diet: கூடுதல் கொழுப்பைக் குறைக்க இந்த காய்கறிகளை மறக்காம உணவில் சேர்த்து கொள்ளுங்கள்

Published : Jun 15, 2023, 10:25 PM IST
Weight Loss Diet: கூடுதல் கொழுப்பைக் குறைக்க இந்த காய்கறிகளை மறக்காம உணவில் சேர்த்து கொள்ளுங்கள்

சுருக்கம்

எடை குறைப்பு என்பது எளிதான பயணம் அல்ல. நமது உணவு, உடல் பயிற்சி அல்லது நமது வாழ்க்கை முறை, அனைத்தும் நமது எடை குறைப்பு முயற்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கோடை காலத்தில், அதிகம் வியர்க்கும் என்பதால் நீரேற்றமாக இருப்பது மற்றும் அதிக திரவங்களை உட்கொள்வதை அதிகரிப்பது முக்கியம். திரவங்களுடன் கூடுதலாக, உடலுக்கு நீரேற்றம் மற்றும் உடல் வெப்பநிலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவையும் சேர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அந்த எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது உணவுமுறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

எடை இழப்புக்கு, வைட்டமின்கள், புரதம் அல்லது நார்ச்சத்து போன்ற வளமான ஊட்டச்சத்து கொண்ட உணவை சாப்பிடுவது முக்கியம். எனவே கூடுதல் கொழுப்பைக் குறைக்க உதவும் காய்கறிகள் குறித்து பார்க்கலாம்.

சுரைக்காய்:- எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கட்டாயம் சுரைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது சேர்க்க மிகவும் சத்தான காய்கறியாகும், ஏனெனில் இதில் 92% தண்ணீர் உள்ளது. இதில் சிறந்த விஷயம் என்னவென்றால், இதில் பூஜ்ஜிய சதவீத கொழுப்பு உள்ளது மற்றும் கலோரிகள் மிகக் குறைவு.

வெள்ளரிக்காய்:- வெள்ளரிக்காய் கோடை காலத்தில் சாப்பிடக்கூடிய ஒரு பொதுவான உணவாகும். வெள்ளரிக்காயில் 96% நீர் உள்ளது மற்றும் மீதமுள்ள நார்ச்சத்து உள்ளது. எனவே நீங்கள் உட்கொள்ள வேண்டிய ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக இது உள்ளது. இது தவிர, வைட்டமின் கே, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.

குடமிளகாய்:- இது உங்கள் உணவிற்கு ஒரு தனித்துவமான சுவையை சேர்க்கிறது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, கொழுப்பைக் குறைக்கிறது.

வெண்டைக்காய்:- உங்கள் எடை இழப்பு உணவில் சேர்க்க மற்றொரு காய்கறி வெண்டைக்காய். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நீரிழிவு மற்றும் இதய நோயாளிகளுக்கு நல்லது.

கீரைகள்:- ப்ரோக்கோலி, முட்டைகோஸ், காலிஃபிளவர், போன்ற பச்சைக் காய்கறிகள். இந்த காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளன. நீர்ச்சத்து நிறைந்த சத்துக்கள் கோடைகால உணவுக்கு சிறந்தவை.

தக்காளி:- மினரல்கள், வைட்டமின்கள், புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்தது. தக்காளியில் அதிக நீர்ச்சத்து மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சியும் இதில் உள்ளது.

கேரட்:- கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கேரட் மிகவும் நல்லது. இதில் வைட்டமின் ஏ உள்ளது மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரம் பசி ஏற்படாமல் தடுக்கிறது.

உடல் எடையை குறைக்க, உணவு மற்றும் உணவுக் கட்டுப்பாடு மட்டுமே போதாது. ஆனால் நீங்கள் சரியாக உடற்பயிற்சி செய்து உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டும். இன்றைய மன அழுத்தம் நிறைந்த வாழ்வில், ஆரோக்கியமான உணவுமுறை மட்டுமே ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ ஒரே வழி.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Push-Ups : இந்த '1' உடற்பயிற்சியை தினமும் காலைல பண்ணாலே 'உடலில்' பல மாற்றங்கள் வரும்
ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!