சுதர்சன் என்பவரின் முதலிரவு சிறப்பாக நடக்க அவரது நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து பேனர் வைத்திருப்பது வைரலாகப் பரவி வருகிறது.
வெவ்வேறு காரணங்களுக்காக விதவிதமாக பேனர்கள் வைப்பதைப் பார்த்திருப்போம். விளம்பரம், வாழ்த்து, இரங்கல் போன்றவை குறித்து பேனர் வைப்பதுதான் அதிகம். ஆனால் தேனிலவு சிறப்பாக நடக்க வேண்டும் என்று பேனர் வைத்து வாழ்த்து தெரிவிப்பவர்களை பார்த்தது உண்டா?
கர்நாடக மாநிலம் மங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட கத்ரி காவல் நிலைய வளாகம் அருகே புது மாப்பிள்ளை ஒருவருக்கு முதலிரவு கொண்டாட்டம் நடக்க உள்ளதைக் குறிப்பிட்டு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
லுங்கி, நைட்டி அணிந்து வெளியே செல்லத் தடை! நொய்டா குடியிருப்பில் நூதன கட்டுப்பாடு
இரவு முழுவதும் போராடி வெற்றி பெற வேண்டும் என நண்பர்கள் புது மாப்பிள்ளை சுதர்சன் என்பவரின் நண்பர்கள் பேனர் வைத்துள்ளனர். இந்த பேனரில் இலங்கை, கத்தார், துபாய் போன்ற வெளிநாடுகளில் உள்ள நண்பர்களும் முதலிரவு சிறக்க வாழ்த்துவதாகக் கூறப்பட்டுள்ளது. பேனரில் உள்ள புகைப்படத்தில் சுதர்சன் 'Take More Risk' என்ற வாசகத்துடன் கூடிய டீ-சர்ட் அணிந்தபடி போஸ் கொடுத்துக்கொண்டு நிற்கிறார்.
இந்த பேனர் காவல் நிலையத்துக்குச் சொந்தமான அரசு இடத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளது என்றும் ஆபாசமான இந்த பேனரை வைத்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதற்கு சட்ட அங்கீகாரம் கிடையாது: கேரள நீதிமன்றம்
சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து, இதுபோன்ற ஆபாசமான பேனர் வைத்தவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், அபராதம் விதிக்க வேண்டும் என மங்களூர் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேனரில் முதலிரவு நடக்கும் தேதி என மார்ச் 1ஆம் தேதியைக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இருப்பினும் சமூக வலைத்தளங்களில் இந்த பேனரை பலரும் ஆச்சரியமாகப் பார்த்து பகிர்ந்து வருகிறார்கள்.
10 லட்சம் வாக்குச்சாவடிகளின் பாஜக ஊழியர்கள் முன் பிரதமர் மோடி உரை