தந்தையர் தினம் வரும் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. உங்கள் தந்தைக்கு ஆரோக்கியமான சிறந்த உணவுகளை இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்.
சாக்லேட் பிஸ்கட் பால்ஸ்!
சாக்லேட் பிஸ்கட் பால்ஸ் செய்வது ரொம்ப ஈஸி, அதேபோல உங்கள் அன்பை பரிமாறவும் ரொம்ப ஈஸியாகிடும். மேலும் இதனை பக்குவமாக ஒரு பாக்ஸில் வைத்து 10 நாட்கள் வரை வைத்துக் கூட சாப்பிடலாம். வாங்க இந்த சுவையான சாக்லேட் பால்ஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம் .
Father's Day 2023 : தந்தையர் தின வரலாறும் அதன் முக்கியத்துவமும்!
தேவையான பொருட்கள்:
மில்க் பிஸ்கட்ஸ் - 10
கோகோ பவுடர் - 3 ஸ்பூன்
கன்டன்ஸ்டு மில்க் - 1/4 கப்
முந்திரி-10 கிராம்
பிஸ்தா-10கிராம்
பாதாம்-10கிராம்
வால் நட் -10 கிராம்
தேங்காய் துருவல் - 1/4 கப்
undefined
Father's day 2023: தந்தையர் தினத்தில் உங்க அப்பாவுக்கு இந்த மாதிரி கிப்ட் கொடுத்து அசத்துங்க!!
செய்முறை:
முதலில் மில்க் பிஸ்கட்களை,ஒரு மிக்சி ஜாரில் போட்டு பொடித்துகொண்டு அதனை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல் பாதாம், பிஸ்தா, முந்திரி, வால் நட் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு, மிக்சி ஜாரில் போட்டு, கொரகொரவென பொடித்துக் கொண்டு, அதனை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் பௌலில் கோகோ பவுடர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் பௌலில் கன்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக மீண்டும் கட்டி இல்லாமல் செய்து கொள்ள வேண்டும். சாஃப்டாக பிசைந்து கொள்ள வேண்டும். சுமார் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரை மணி நேரத்திற்கு பிறகு, பிசைந்த கலவையினை, கொஞ்சம் கையில் எடுத்து , சிறிய லெமன் சைஸ் உருண்டைகளாக எடுத்து உருட்டி கொண்டு, அதன் மேல் தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு சில உருண்டைகளை பொடித்து எடுத்து வைத்துள்ள நட்ஸ்களுடன் சேர்த்து பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதாங்க மிக சிம்பிளாக, டேஸ்டான சாக்லேட் பிஸ்கட் பால்ஸ் ரெடி.
இதையும் படிங்க: Father's Day 2023: தன்னலமற்ற அன்பின் அடையாளம்! தந்தையர் தினம் ஏன் கண்டிப்பா கொண்டாட வேண்டும் தெரியுமா?
பீட்ரூட் கட்லெட்!
பீட்ரூட் கட்லெட் இது உடலுக்கு ரொம்ப நல்லது. வயசானவங்க உடல் ஆரோக்கியத்துடன் இருக்க இந்த டிஷ் ட்ரை பண்ணலாம். பீட்ரூடானது , உடல் பருமன், சோர்வு , மலசிக்கல் போன்ற உபாதைகளை நீக்கி, உடலுக்கு வலிமையை தருகிறது.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 2
வெங்காயம் - 1
வாழைக்காய் - 1
ப்ரெட் க்ரம்ஸ் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மல்லித் தூள் -2 சிட்டிகை
சீரக தூள் -2 சிட்டிகை
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
ஆம்சூர் பவுடர்- 2 சிட்டிகை
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மல்லித்தழை - கையளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் தண்ணீரில் வாழைக்காயை தோலுடன் போட்டு, 3/4 பதத்திற்கு வேக வைத்துக் கொண்டு, ஆறிய பிறகு, அதனை தோலுரித்து சீவிக் கொள்ள வேண்டும். பின் பீட்ரூட்டை அலசிவிட்டு, அதனையும் துருவி வைத்துக் கொண்டு, பின் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.அரிந்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் விட்டு, சூடான பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் வாசனை செல்லும் வரை வதக்கி விட்டு, பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட வேண்டும். அதன் பிறகு, துருவிய பீட்ரூட் சேர்த்து சுமார் இரண்டு நிமிடங்கள் வதக்கி விட்டு, பின் சீரகத்தூள், மஞ்சள் தூள்,ஆம்சுர் பவுடர், கரம் மசாலா தூள், மிளகாய்தூள்,மல்லித்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
மசாலாக்களின் காரத்தன்மை செல்லும் வரை வதக்கி விட்டு, பின் அதில் துருவிய வாழைக்காய் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி, அடுப்பை ஆஃப் செய்து விட்டு, இறக்கி விட வேண்டும். பின் ப்ரெட் க்ரம்ஸ், கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து பிடித்த வடிவத்தில் தட்டிக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பான் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி , கட்லெட்டை போட்டு, அடுப்பினை சிம்மில் வைத்து ஒவ்வொரு பக்கமும் சிவக்கும் வரை வேக விட வேண்டும். திருப்பி போடும் போது சிறிது எண்ணெய் ஊற்ற வேண்டும். அவ்ளோதாங்க சத்தான பீட்ரூட் கட்லெட் ரெடி!!! சாஸ் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இதனை இன்றே ட்ரை பண்ணி பாருங்கள்.