
நா அடக்கம் தேவை என்பதற்கு மிக சிறந்த உதாரணமாக சமீபத்தில் நீதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையை கூறலாம்.
சண்டை சச்சரவுகள் என்றால், வாயில் என்ன வரும்னே தெரியாது என வீர வசனம் பேசும் ஒவ்வொரு சாமானியனும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷியம் இது தான்.....
கௌரவ கொலைகள்
கௌரவ கொலைகள் நடைபெறுவதை பற்றி நாம் கேள்வி பட்டிருப்போம்.வேறு சாதியினரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டால் சில சாதியினர் அதனை எதிர்த்து பல கௌரவ கொலைகளை செய்து விடுவதை செய்திதாள்களில் அடிக்கடி வருவதை பாப்போம்
தற்போது போனில் திட்டினால் கூட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விவரம் நமக்கு தெரியுமா ?
போனில் பேசும் போது, வேறொரு இடத்தில் உள்ள ஒருவரை, ஜாதியின் பெயரைக் கூறி திட்டினாலும், வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்' என, உச்ச நீதி
மன்றம் தீர்ப்பு
ஜாதியின் பெயரைக் கூறி திட்டினால், எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரலாம்.இந்த சட்டத்தின்படி, அதிக பட்சம், ஐந்து ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப் படும்.
'தொலைபேசியில் பேசும்போது, ஜாதியின் பெயரில் திட்டினாலும், அது குற்றமாகும்' என,உத்தரப் பிரதேசத அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஜே.சலமேஸ்வர், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அமர்வு கூறியுள்ளது.
எனவே யாரும் சாதியின் பெயரை சொல்லி திட்டவே கூடாது என்பதை புரிந்துகொள்ளுதல் வேண்டும்....
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.