
நம் குழந்தைகளை நன்கு படிக்க வேண்டும், ஆங்கிலத்தில் பேச வேண்டும், பீட்சா சாக்லேட் கொடுத்து அயல்நாட்டவர்கள் கலாச்சாரத்தை பெரு மதிப்பாக நினைத்து இன்றைய பெற்றோர்கள் குழந்தையை வளர்க்கும் முறையில் மாபெரும் மாற்றம் தானே இதெல்லாம்...
இதெல்லாம், ஒருபுறம் இருக்க நம் பிள்ளைகளுக்கு மரியாதையை சொல்லி தருகிறோமா என்று நினைத்து பாருங்கள்....
இல்லை என்பது தான் உண்மை ...காரணம் முதலில் நாம் பழமை மாறாமல் மற்றவர்களிடம் எப்படி மரியாதை கொடுத்து பேசுகிறோமோ அதனை தான் நம் குழந்தைகள் கடை பிடிக்கும். மரியாதை செலுத்தும் விதமாக கைகூப்பி வணக்கம் சொல்லும் முறை எல்லாம் எங்கோ சென்றுவிட்டது அல்லவா...முதலில் இதை சொல்லி தருவோம்.....
1. வணக்கம் சொல்லுங்கள்
பெரியவர்களை பார்க்கும் போது முதலில் வணக்கம் சொல்லுங்கள்...உங்கள் குழந்தையும் அதே போன்று வணக்கம் சொல்லும்
2. சென்னை உள்ளிட்ட நகர்களில் வளரும் குழந்தைகள் கைகூப்பி வணக்கம் சொல்லும் முறை கிராமத்தில் தான் இருக்கணும் போல என தானாகவே நினைக்கும் அளவிற்கு உள்ளனர்
3.மனிதாபி மானம்
நாம் பேருந்தில் பயணிக்கும் போது, வயதானவர்களோ அல்லது கர்ப்பிணி பெண்ணோ நின்றுகொண்டே பயணித்தால் அவர்களுக்கு இருக்கையில் அமர இடம் கொடுக்கும் மனப்பான்மையை வளர செய்யுங்கள்
4. நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கும் எந்த ஒரு உணவு பண்டமாக இருந்தாலும் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கோ அல்லது மற்ற குழந்தைகளுக்கோ சற்று கொடுத்துவிட்டு தான் உண்ணும் பழக்கத்தை மேம்படுத்துங்கள்....
5. நம் வீட்டை தேடி வரும் நண்பர்கள் உறவினர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வாங்க என அன்போடு அழைக்க கற்று கொடுங்கள்.
6.சுப நிகழ்சிகளுக்கு அழைத்து சென்று உறவுனர்களை அறிமுகம் செய்து வையுங்கள்...அவர்களிடம் உங்கள் பிள்ளைகளை பற்றி சரியான வாலு,அடமண்ட் னு சொல்லி தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்
7. யாரேனும் நம்மிடம் சில முக்கியமான விஷயத்தை பேசும் போது தொலைகாட்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தவிர்த்து அவர்கள் கண் பார்த்து பேசி பழகுங்கள்..... அருகில் உங்கள் குழந்தைகள் செல்போன் விளையாடினாலும் அதனை அவர்களே தவிர்த்து விடுவார்கள்....
8.கார்டூன் வீடியோவை பார்க்கும் குழந்தைகள், அதில் தனக்கு பிடித்த கதாபாத்திரம் எதை செய்கிறதோ அதனை பின்பற்றும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள் ...எனவே மரியாதையாக பேசுவது போல் வரும் கார்டூனை பார்க்க அனுமதி கொடுங்கள்....
இதெல்லாம் செய்தாலே போதும் நம் குழந்தை நல்ல முறையில் வளருவார்கள்... பெற்றவர்களுக்கும் பெருமை சேர்ப்பார்கள்.....
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.