
அமாவாசை என்றால், இருள் சூழ்ந்த நாள் என்று சொல்லலாம். இந்த உன்னதமான நாளில் அம்மன் வழிபாடு,முன்னோர்களை வழிபடுதல்,குல தெய்வ வழிபாட்டுக்கு மிக உகந்த நாளாகும்
அமாவாசை அன்று செய்ய கூடாதவை
அம்மாவசை அன்று இதை செய்யாமல் இருந்தால்,ஐஸ்வர்யம் பெருகும் என்று பணவளக்கலை சொல்கிறது..
அமாவாசை அன்று காற்று வெப்பம் என அனைத்திலும் ஏற்ற இறக்கம் காணப்படும்.
அந்த சமயத்தில், எதாவது அடிபட்டால் கூட அதிக ரத்தம் வர நேரிடுமாம். அதுமட்டும் அல்லாமல், அன்றைய தினம் அடிபட்டால்,விரைவில் ஆறாது.
பொதுவாகவே அமாவசை பவுர்ணமி அன்று எந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியை செய்யவும் தயங்குவர். இந்த இரண்டு நாட்களில் நம் மனது ஒரு விதமான பட படப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
இதன் காரணமாக அந்த படபடப்பு நேரத்தில்,வேறு எந்த செயலையும் செய்யாமல் இருந்தால் நல்லது என கூறுவதற்கு காரணம்,நாம் எதையாவது செய்து சிறிய அளவில் அடிபட்டாலும், அன்றைய தினம் பெரிய பிரச்சனையாக மாறும் என்பது ஐதீகம்.
அமாவாசை அன்று கடினமான வேலையை செய்ய கூடாது
பதற்றமாகவோ அல்லது கோபமாகவோ இருக்கக் கூடாது
அமாவாசை அன்று எந்த ஒரு முடிவையும் எடுக்க கூடாது.அதற்கு பதிலாக,அமாவாசை அன்று அமைதியாக,இறை வழிபாடு மேற்கொள்வது நல்லது என கூறப்படுகிறது
அமாவாசை அன்று கோலம் போடக் கூடாது..
மேலும், நம் முன்னோர்கள்தானே வந்தால் என்ன என்று கேள்வி எழலாம்....
அவர் வந்தால்,நெகடிவ் வைப்ரேஷன் ஏற்பட்டு,ஏதோ ஒரு பிரச்சனையை கொண்டு வரும் என்பது ஐதீகம்.
அமாவாசை அன்று அன்னதானம் செய்து வந்தால், ஐஸ்வர்யம் பெருகுமாம்.
எனவே அமாவாசை அன்று எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்பதில் தனி கவனம் செலுத்துவது நல்லது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.