
உண்ணும் போது இதுநாள் வரை நீங்கள் செய்துவந்த பெரும் தவறு இதுதான்..! இனியாவது...!
நாம் உண்ணும் போது எதையெல்லாம் செய்யகூடாது.. எதை செய்ய வேண்டும் என சில விஷயங்கள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம். உணவினை வியாதிக்கு மருந்து உண்ணுவது போல உண்ணவேண்டும். ருசிக்காக உண்ணக் கூடாது. அது உடல் நலனை பாதிக்கும். உண்ணும்போது மகிழ்வுடன் உண்ண வேண்டும்.
குழந்தைகளுக்கு முன் எதையும் அவர்களுக்கு தராமல் உண்ணக்கூடாது. அதிலும் புகைத்தல் மது அருந்துதல் நிச்சயம் கூடாது. எந்த பானத்தையும் எச்சில் செய்து குடிக்கக்கூடாது. நாம் குடித்த எச்சில் பானத்தை நம்மை விட பெரியவர்களுக்கு தெரிந்தே தரக்கூடாது. உணவினை வீணாகக்கூடாது. அன்னதானம் செய்பவர்களை எந்த காரணம் கொண்டும் இழிவாக பேசக்கூடாது.
பந்தியின் நடுவே எழுந்திருக்கக்கூடாது. சாப்பிடும்போது கோபப்படக்கூடாது உண்ணும்போது குழந்தைகளை விரட்டுவது கூடாது. உண்ணும்போது புறங்கையை நக்குவது, சப்தத்துடன் உறிஞ்சுவது கூடாது, உணவு உண்ணும்போது படுத்துக்கொள்ள கூடாது. கால்களை நீட்டிக் கொண்டு உண்ணக் கூடாது. அவர்களைத் தவிர மற்றவர்கள் தரையில் அமர்ந்துதான் உண்ணவேண்டும்.
ஈரமான ஆடைகளை அல்லது ஒற்றை ஆடையுடன் உணவு உண்ணக்கூடாது. உண்ணும் போது முகம் கை கால் சுத்தம் செய்த பின்னரே உணவருந்த வேண்டும். தரமான நல்ல நிலையில் உள்ள பொருட்களை மட்டுமே தானமாக தர வேண்டும் தரமில்லாத மற்றும் பால் பொருட்களை யாருக்கும் தானமாக தர கூடாது. இவை அனைத்தும் வாழ்வில் நாமும் தெரிந்துகொண்டு மேற்குறிப்பிட்ட சில விஷயங்களை கடைபிடித்தால் நல்லது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.