குரு பெயர்ச்சி..! 3 நாட்களுக்குள் 15 நிமிடம் மட்டும் இப்படி வணங்க வேண்டும்..!

By thenmozhi gFirst Published Oct 4, 2018, 3:50 PM IST
Highlights

எந்த தெய்வத்தை வணங்கினால் குரு பெயர்ச்சி நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம் இன்று குரு பெயர்ச்சி, துலாம் ராசியிலிருந்து விருச்சக ராசிக்கு இன்று குரு பெயர்ச்சி நடக்கிறது

எந்த தெய்வத்தை வணங்கினால் குரு பெயர்ச்சி நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.இன்று குரு பெயர்ச்சி, துலாம் ராசியிலிருந்து விருச்சக ராசிக்கு இன்று குரு பெயர்ச்சி நடக்கிறது

குரு பெயர்ச்சியையொட்டி 12 ராசியினரும் வணங்க வேண்டிய தெய்வங்கள்..!  

வரும் மூன்று நாட்களில் கண்டிப்பாக நாம் தட்சணாமூர்த்தியை வணங்க வேண்டும்.. குருபெயர்ச்சி என்பதால் 15 நிமிடம் நம் ராசிக்கு ஏற்ப அந்தந்த இடத்தில் உள்ள குறிப்பிட்ட தெய்வத்தை வணங்க வேண்டும் 

மேஷம் - திருவண்ணாமலை உள்ள தட்சணாமூர்த்தி....

ரிஷபம் - காஞ்சி ஏகாம்பரரீஸ்வரர் வணங்கலாம் 

மிதுனம் -  சிதம்பரம் தட்சணாமூர்த்தி 

கடகம் - திருசெந்தூர் முருகன் கோவிலில் உள்ள தட்சணாமூர்த்தி 

சிம்மம் - கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் தட்சணாமூர்த்தி 

கன்னி - சங்கரன் கோவிலில் உள்ள தட்சணாமூர்த்தி

துலாம் - மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் உள்ள தட்சணாமூர்த்தி

விருச்சிகம் - திருவிடை மருதூர் தட்சணாமூர்த்தி

தனுசு - ஆலங்குடி தட்சணாமூர்த்தி

மகரம் - திருவன்னைகாவல் ஜலகடேஸ்வரர் கோவிலில் உள்ள தட்சணாமூர்த்தி

கும்பம் - திருக்கடையூர் அமிர்த கனேஸ்வரர் தட்சணாமூர்த்தி

மீனம் - ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள தட்சணாமூர்த்தி

கு - என்றால் இருள், ரு - என்றால் வெளிச்சம்....

எனவே குரு பெயர்ச்சி என்பது இருளில் இருந்து வெளிச்சத்திற்கு நாம் செல்கிறோம் என்பது பொருள். எனவே கு பெயர்ச்சியை தொடர்ந்து மேற்குறிப்பிட்ட கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் பரவாயில்லை.. அதற்கு பதிலாக அருகில் உள்ள கோவிலுக்கு சென்று தட்சணாமூர்த்தியை ஒரு 15 நிமிடம் நின்று வணங்குவது நல்லது. இன்று முடியவில்லை என்றாலும், இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்த மூன்று நாட்களுக்குள் தட்சனணாமூர்த்தி கோவிலுக்கு சென்று 15  நிமிடம் வணங்குவது நல்லது. 

அவ்வாறு வணங்கி வந்தால் இந்த ஆண்டு வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் நம்மை வந்து அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!