காதலிப்பவரா நீங்கள்? உங்கள் காதலி மீது உங்களுக்கு சந்தேகமா? இதைப்படிங்க முதல்ல…

By vinoth kumarFirst Published Oct 4, 2018, 12:22 PM IST
Highlights

சந்தேகம் என்பது இரு பாலருக்கும் உரியது. ஆண் நண்பர்களுடன் மெசேஜ் செய்வதை, பேசுவதை, வெளியே செல்வதை, பிற ஆண்களை பற்றி புகழ்ந்து பேசுவதை எல்லாம் சிலரால் சுத்தமாக தாங்கிக் கொள்ள முடியாது.

சந்தேகம் என்பது இரு பாலருக்கும் உரியது. ஆண் நண்பர்களுடன் மெசேஜ் செய்வதை, பேசுவதை, வெளியே செல்வதை, பிற ஆண்களை பற்றி புகழ்ந்து பேசுவதை எல்லாம் சிலரால் சுத்தமாக தாங்கிக் கொள்ள முடியாது. இதை பொறாமை, சந்தேக குணம் என்று கூறிவிட முடியாது. இது ஒருவகையான பாதுகாப்பின்மை உணர்வு. இதை காதலிகளால் மட்டுமே சரி செய்ய முடியும். 

பேசுங்கள்

ஆண் நண்பர்களுடன் பழகுவதை அவர்கள் விரும்பவில்லை அல்லது பாதுகாப்பின்மை உணர்வு கொள்கிறார்கள் என்றால் அவர்களிடம் பேசுங்கள். நட்பை பற்றி முழுமையாக் கூறுங்கள். நட்பு எவ்வளவு ஆழமானது என்றும் அது வெறும் நட்பு மட்டுமே - அதை தாண்டி வேறொன்றும் இல்லை என்பதையும் புரிய வையுங்கள்.

நேர்மை

காதலரிடம் பொய் கூறிவிட்டு ஆண் தோழர்களுடன் செல்ல வேண்டாம். இது பாதுகாப்பின்மை உணர்வை சந்தேக உணர்வாக மாற்றும். ஒளிவுமறைவு இன்றி உண்மையை கூறுதல் பாதுகாப்பின்மை உணர்வை குறைத்து நம்பிக்கைக்கு வழிவகுக்கும்

சேர்ந்து!

நண்பர்களுடன் தனியாக  செல்வதை தவிர்த்து, காதலரையும் அழைத்துச் சென்றால் இரு தரப்பினருக்கும் நட்பு மலரும் இதனால், உங்கள் மீது மட்டுமின்றி, ஆண் தோழர் மீதும் காதலனுக்கு நன்மதிப்பும், நம்பிக்கையும் அதிகரிக்கும்.

சந்தேகம் வேண்டாம்...

ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே போவதை போலவே, உங்கள் காதலன் அவரது பெண் தோழிகளுடன் எங்கேனும் வெளியே போனால், சந்தேகப்பட வேண்டாம். காதலனின் தோழிகளுடன் நட்பாக பழக கற்றுக் கொள்ளுங்கள்
 
இணைப்பிரியாத...

ஒருபோதும், எந்த காலக் கட்டத்திலும், எந்த சூழலிலும் உங்கள் காதலருடனான தொடர்பை குறைத்துக் கொள்ள வேண்டாம். அதே போல எந்தவொரு பிரச்சனை, சந்தேகமாக இருந்தாலும் அதை முகத்தின் நேரே நேரடியாக கேட்டு அறிந்துக் கொள்ளுங்கள். 

யோசிக்க தவற வேண்டாம்...

உங்களுக்கும், உங்கள் காதலருக்கும் நடுவே இருக்கும் பிரச்சனையை அந்தரங்க சண்டைகளை எக்காரணம் கொண்டும் நண்பர்களுடன் பகிர வேண்டாம். பகிர்ந்து கொண்ட விஷயம் காதலனுக்கு அறிய வந்தால் பிரச்சனையாக உருவெடுக்கும்.

உங்கள் உரிமை!

நீங்கள் யாருடன் பழக வேண்டும், உங்கள் நண்பர்களாக யாரெல்லாம் இருக்க வேண்டும் என்று தேர்வு உங்களுடையதுதான் நீங்கள் தவறான பாதையில் பயணிக்கும் போது பிறர் சொல்லும் கருத்துக்களை எடுத்துக் கொள்ளுதல் சிறப்பு. மற்றபடி காதலனுக்கு பிடிக்கவில்லை, அவர் சந்தேகப்படுகிறார் என்பதற்கெல்லாம் ஒரு நட்பை முறித்துக் கொள்வது என்பது தவறான செயல். சிறந்த உறவு நட்பு தான். எனவே, யாருக்காகவும், எதற்காகவும் சிறந்த நட்பை இழந்துவிட கூடாது.

click me!