பகலில் தூங்கினால் உடல் எடை அதிகரிக்குமா? மாரடைப்பு ஏற்படுமா?

By thenmozhi gFirst Published Oct 3, 2018, 4:39 PM IST
Highlights

தூங்காமல் இருப்பது அதிக நேரம் தூங்குவது என இரண்டுமே ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடியது. பிற்பகல் தூக்கம் மாரடைப்பை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படும் நிலையில் அது குறித்த ஒரு மாறுபட்ட பதிவு. பிற்பகல் தூக்கம் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது. 

தூங்காமல் இருப்பது அதிக நேரம் தூங்குவது என இரண்டுமே ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடியது. பிற்பகல் தூக்கம் மாரடைப்பை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படும் நிலையில் அது குறித்த ஒரு மாறுபட்ட பதிவு.
  
பிற்பகல் தூக்கம் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது. 

ஜப்பான் போன்ற நாடுகளில் மதிய தூக்கம் அனைத்து அலுவலகங்களிலும் அனுமதிக்கப்பட்ட ஒன்று. மதிய தூக்கம் செயல்திறனை அதிகரிக்கும் என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.தூக்கம் தொடர்பான பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டிருந்தாலோ அதிக மனஅழுத்ததில் இருந்தாலோ பகல் தூக்கத்தை தவிர்க்க வேண்டும். 

இன்சோமேனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு நேரத்தில் தூங்காமல் இருப்பது மோசமான ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

திட்டமிட்ட பகல் தூக்கம்

திட்டமிட்ட பகல் நேர தூக்கம் என்பது இரவு நேர தூக்கத்தை போல எழும்நேரத்தை கணக்கிட்டு சரியான நேரத்தில் எழுவதாகும்.

அவசர தூக்கம்

இந்த வகையான தூக்கம் அதிக சோர்வு அல்லது உடல்நல கோளாறுகள் இருப்பவர்களுக்கானது. 

அவர்களுக்கு பகல் நேர தூக்கத்தை தவிர வேறு வழியில்லை

வழக்கமான தூக்கம்

தினமும் ஒரே நேரத்தில் தூங்குவது வழக்கமான தூக்கம் பலருக்கும் தினமும் மதியம் சாப்பிட்டபின் தூங்கும் பழக்கம் இருக்கும். பகல் நேர தூக்கத்தில் சில பாதகங்கள் இருந்தாலும் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கிறது.

நினைவாற்றல்

தினமும் பிற்பகலில் இருபதிலிருந்து முப்பது நிமிடங்கள் உறங்குபவர்களின் மூளை செயல்திறன் மற்றும் நினைவாற்றல் தூங்காமல் இருப்பவர்களை விட சிறப்பாக இருக்கும்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

ஆய்வுகளின் படி பகல் நேரங்களில் குட்டி தூக்கம் போடுபவர்களுக்கு இரத்த அழுத்தம் அதிகரிப்பது 37 சதவீதம் குறைவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதய ஆரோக்கியம் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படைப்பாற்றல் 

தூக்கம் என்பது முழுமையான ஓய்வாகும். முழுமையாக தூங்கினால் மூளைக்கு போதுமான ஓய்வு கிடைக்கிறது. இதனால் கற்பனைத்திறன் அதிகரிக்கும், பழைய நினைவுகளை பாதுகாக்கும். அமைதியான தூக்கம் வெற்றிக்கான சாவி

நரம்பு மண்டலத்தை அமைதியாக்குகிறது

90 நிமிட தூக்கம் அமைதியையும், நிம்மதியையும் அளிக்கும். அதிக அளவு கோபம், பயம் மகிழ்ச்சி போன்றவற்றால் நரம்பு மண்டலம் அதிக வேலை செய்யும். நரம்பு மண்டலத்தை அமைதியாக்க சிறு தூக்கத்திற்கு செல்லுங்கள்.

click me!