உடற்பயிற்சி, வாக்கிங், ஜாக்கிங் வேண்டாம்! உடல் எடையை குறைக்க இந்த ஜூஸ் போதும்…

By thenmozhi gFirst Published Oct 3, 2018, 3:26 PM IST
Highlights

உடல் எடையைக் குறைக்க பல்வேறு வழிமுறைகளும் உணவுப் பழக்க வழக்கங்களும் உள்ளன. அவற்றில் பக்க விளைவுகள் இல்லாத நீண்ட பலனை அளிக்கக் கூடிய ஜூஸ் டயட்டுகளில் முள்ளங்கியும் முக்கியமானது.

உடல் எடையைக் குறைக்க பல்வேறு வழிமுறைகளும் உணவுப் பழக்க வழக்கங்களும் உள்ளன. அவற்றில் பக்க விளைவுகள் இல்லாத நீண்ட பலனை அளிக்கக் கூடிய ஜூஸ் டயட்டுகளில் முள்ளங்கியும் முக்கியமானது. ஒரு கப் அன்னாசித் துண்டுகளையும், ஒரு முள்ளங்கித் துண்டையும் சேர்த்து அரைத்து முள்ளங்கி ஜூஸ் தயாரிக்கலாம்

முள்ளங்கியை பச்சையாக அப்படியே சாப்பிடுவதை விட, ஜூஸ் வடிவில் உட்கொண்டால், உடலால் சத்துக்களை வேகமாகவும் எளிதாகவும் உறிஞ்ச முடியும். 

முள்ளங்கியை அரைத்து ஜூஸ் தயாரிக்கும் போது, முழு வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஐசோதியோசையனேட் போன்றவை கிடைக்கும். ஐசோதியோசையனேட்டுகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோயை எதிர்க்கும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் ஆக்ஸிஜனேற்ற செயல்முறையால் ஏற்படும் திசு பாதிப்பை தடுக்கும். திசுக்கள் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருந்தால், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரிக்கும். 

உடலில் கொழுப்புக்களின் தேக்கம் குறையும்

முள்ளங்கி ஜூஸ் செரிமான மண்டலத்தை சுத்தம் செய்வதில் சிறந்தது. 

உடலின் மூலை முடுக்குகளில் உள்ள டாக்ஸின்களை நீக்கும். 

செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உவுவதோடு, பித்தநீரை சீரான அளவில் உற்பத்தி செய்யும். 

முள்ளங்கியில் உள்ள அதிக நார்ச்சத்து விரைவில் செரிமானமாகாது என்பதால் நீண்ட நேரம் பசியெடுக்காது இதனால் உண்ணும் உணவின் அளவு குறையும். 

முள்ளங்கியில் கலோரிகள் மிகவும் குறைவு. எனவே இது எடையைக் குறைக்க உதவும் சிறப்பான காய்கறியாக கருதப்படுகிறது. எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் ஸ்நாக்ஸ் நேரத்தில் முள்ளங்கி ஜூஸைக் குடிக்கலாம்.

click me!