உண்ணும் போது மகிழ்ச்சியாக உண்ணுதல் வேண்டும், உண்ணும் போது ஒரு சில விஷயங்களை நாம் பின்பற்ற வேண்டியது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது, அது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.தரமான நல்ல உணவு மட்டுமே அதனை தானமாக தர வேண்டும். தரமில்லாத பால் பொருட்களை யாருக்கும் தர கூடாது.
உணவு உண்ணுவதில் நாம் செய்யும் "தவறு"..! இப்போதே திருத்திக்கொள்ளுங்கள்..!
நாம் எதை செய்தாலும் அதற்கு ஒரு வரைமுறை உள்ளது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. தான்தோன்றித்தனமாக ஸ்டைலாக இருக்க வேண்டும் என்பதற்காக...ஒரு சில விஷயத்தை தவறாக கடைபிடிப்பது உண்டு, அந்த வகையில், உண்ணும் போது நாம் பின்பற்ற வேண்டிய சில நெறிமுறைகள் உள்ளது.
உண்ணும் முன் கவனிக்க வேண்டியது..!
கால்களை நீட்டிக்கொண்டு உண்ணக்கூடாது. பெரியவர்களை தவிர மற்றவர்கள் தரையில் அமர்ந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. ஈரமான ஆடையை அணிந்து கொண்டோ அல்லது ஒற்றை ஆடையுடன் உண்ணுதல் கூடாது. உண்பதற்கு முன்பாக முகம் கை கால்களை சுத்தம் செய்த பிறகு உண்ணுதல் வேண்டும்.
எப்போதும் உணவினை ருசிக்காக உண்ணக்கூடாது. போதுமான அளவுக்கு தரமான ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொண்டாலே போதுமானது.
உண்ணும் போது மகிழ்ச்சியாக உண்ணுதல் வேண்டும், உண்ணும் போது ஒரு சில விஷயங்களை நாம் பின்பற்ற வேண்டியது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது, அது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.தரமான நல்ல உணவு மட்டுமே அதனை தானமாக தர வேண்டும். தரமில்லாத பால் பொருட்களை யாருக்கும் தர கூடாது.
குழந்தைகளுக்கு முன் எதையும் அவர்களுக்கு தராமல் நாம் உண்ணுதல் கூடாது. அதிலும் புகைத்தல் மது அருந்துதல் நிச்சயம் இருக்கக்கூடாது. எந்த பணத்தையும் எச்சில் செய்து குடிக்க கூடாது. உணவினை வீணாக்கக்கூடாது. அன்னதானம் செய்பவர்களை எந்த காரணம் கொண்டும் இழிவாகப் பேசுதல் கூடாது நடுவே திடீரென எழுந்து இருக்க கூடாது
பந்தியின் நடுவே திடீரென எழுந்திருப்பது கூடாது. சாப்பிடும் போது கோபம் வரக்கூடாது. உண்ணும் போது குழந்தைகளை விரட்டுவது அறவே இருக்கக்கூடாது. உண்ணும்போது கையை நக்குவது, சப்தத்துடன் உறிஞ்சுவது தவறான ஒன் று. படுத்துக்கொண்டு உண்ண முயற்சி செய்தல் கூடாது.மேற்குறிப்பிட்ட இந்த விஷயங்களை கட்டாயம் நாம் உண்ணும் போது கடைபிடிப்பது மிகவும் நல்லது.