சீனாவின் "ரகசியத்தை" போட்டுடைத்த பிரபல செய்தியாளர் "லியூ ஜின்"! உயிரிழப்பு கட்டுக்குள் கொண்டுவந்தது எப்படி?

By ezhil mozhi  |  First Published Apr 25, 2020, 12:36 PM IST

76 நாட்கள் கடுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. மக்கள் எங்கெல்லாம் தங்கி இருந்தார்களோ, அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்ல முயவில்லை. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வில்லை. சாலைகள் வெறிச்சோடின.  


சீனாவின் "ரகசியத்தை" போட்டுடைத்த பிரபல செய்தியாளர் "லியூ ஜின்"! உயிரிழப்பு கட்டுக்குள் கொண்டுவந்தது எப்படி? 

உலகையே அச்சுறுத்தி வரும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தாக்கம், அங்கு கட்டுக்குள் கொண்டு வந்தாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள்  உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் என்ன  என்பது குறித்து சீனாவின் பிரபல பத்திரிகையாளர் லியூ ஜின் விவரித்துள்ளார்.

Latest Videos

பத்திரிகையாளர் லியூ ஜின் கொடுத்த விளக்கம்

கடந்த சில நாட்களக்கு முன்பு, ஹுவாங்  அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பல்கலைக்கழகத்திற்கு சென்றேன். பல்வேறு நாடுகளை சேர்ந்த இங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பேசினேன்.  அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. அதற்கு காரணம்...கடுமையான கட்டுப்பாடுகள், அதாவது கட்டாயமாக அவரவர் தனிமைப்படுத்திக்கொண்டனர்.

கொரோன பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், மாணவர்கள் யாரும் வெளியில் செல்லவில்லை.. தொடந்து பல நாட்களாக கல்லூரிக்குக்குள்ளேயே மாஸ்க் அணிந்து  தனிமைபடுத்திக்கொண்டனர். அவர்களே சமைத்து உண்டனர். எதற்காகவும் வெளியில் செல்லவில்லை.இப்படி ஒரு நிலை இருப்பது மிகவும் கடினம் தான். ஆனால் சமுக  விலகல் கடைபிடிப்பதன் முக்கியத்துவதை அவர்கள் அறிந்திருந்தனர். அதன் விளைவு.. அவர்களில் யாருக்கும் கொரோனா தாக்கம் இல்லை 

76 நாட்கள் கடுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. மக்கள் எங்கெல்லாம் தங்கி இருந்தார்களோ, அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்ல முயலவில்லை. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வில்லை. சாலைகள் வெறிச்சோடின.  

ஆனால் அமெரிக்காவில் நடந்தது என்ன?

ஒரு சிலர் வேலைக்கு செல்கின்றனர். ஒரு சிலர் பயந்து வீட்டில் இருக்கின்றனர். ஒரு சிலர் மாஸ்க் அணிந்து செல்கின்றனர். பலர் மாஸ்க் அணியவில்லை. ஆனால் ஹுவானில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. மாஸ்க் அணியாத எவரையும் வெளியில் பார்க்க முடியாது. இந்த ஒரு புரிதல் சீன மக்களுக்கு பேருதவியாக இருந்தது. 

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 2 வாரங்களில், சீனாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 40 ஆயிரம் மருத்துவ ஊழியர்கள் ஹுவாங் மாகாணத்திற்கு வந்தனர். அப்போது, அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று விவரத்தை கேட்டறிந்தேன். மருத்துவமனைகளில் அடுக்கடுக்காக வெண்டிலேட்டர் வைத்து இருந்தனர். மிகவும் ஆபத்தான கண்டிஷன் கொண்ட நோயாளிகளுக்கு கட்டாயம் வென்டிலேட்டர் தேவைப்படும் என்ற நிலை இருந்தது. 

இந்த ஒரு தருணத்தில், நோய் எதிர்ப்பு தன்மை உடலில் உள்ளதா? நாட்டின் பொருளாதாரம் பாதிக்குமா ? என்பது குறித்து யாரும் விவாதம் செய்யவில்லை. ஆனால் உயிர் பலி ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மட்டும்  தீவிரம் காட்டப்பட்டது.

ஹுவானில் கொரோனாவால் பாதித்த 3600 கும் மேற்பட்ட வயது முதியவர்களில், 80 பேர் உயிர்பிழைத்தனர். அதில் 7 பேர் 100 வயதை கடந்தவர்கள். ஆனாலும் கொரோனாவில் இருந்து முழுமையாயாக மீண்டனர். இந்த சாதனை மற்ற எந்த நாடுகளிலும் இதுவரை சாத்தியம் இல்லை.

ஹுவாங் மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின், வீடு திரும்பியுள்ளார். அவரது சிகிச்சைக்கான கட்டணத்தையும் அவர் செலுத்தி உள்ளார். அதன் பின்னர் கொரோனாவிற்கு அரசு இலவச சிகிச்சை அளிக்குமென அறிவிப்பு வெளியிட்ட பின், சிகிச்சைக்காக அவர் செலுத்திய பணத்தை மீண்டும் பெற்று உள்ளார். இது தவிர கொரோனா அறிகுறிகளுடன் இருந்தவர்களுக்கு சிறு சிறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மருத்துவமனைகளில் சீன பாரம்பரிய மருத்துவத்தை பின்பற்றப்பட்டது 

நான் காடைசியா ஒரு முக்கிய விஷயத்தை சொல்ல நினைக்கிறன், மேற்கத்திய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மக்களுக்கு கொரோனா தாக்கம் குறித்த சரியான புரிதல் இன்றும் இல்லை என்பதை புரிந்துகொள்ளலாம். ஆனால் தற்போது நடமாடும் சீன மக்கள், கொரோனாவில் இருந்து மீண்டதற்கான மிக முக்கிய காரணம் மக்களின் ஒத்துழைப்பு என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் தாரக மந்திரமாக சொல்கின்றனர் .

இவ்வாறு பத்திரிகையாளர் லியூ ஜின் அவரது அனுபவத்தை பகிர்ந்து உள்ளார்.

click me!