அதிர்ச்சி தகவல்: ஜூலை இறுதியில் கொரோனாவின் 2 ஆவது அலை தாக்கும்..! எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்..!

By ezhil mozhiFirst Published Apr 25, 2020, 1:32 PM IST
Highlights

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் கூட மீண்டும் அதே வைரசால் பாதிக்கப்பட்ட ஒரு நிகழ்வை பார்க்க முடிகிறது. இரண்டாவது முறையாக நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்கள் போதுமான எதிர்ப்பு சக்தி பெற்றிருப்பார்கள் என கூறவும் முடியாது. 

அதிர்ச்சி தகவல்:  ஜூலை இறுதியில் கொரோனாவின் 2 ஆவது அலை தாக்குதல்..! எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்..! 

உலகம் முழுவதும் தொடர்ந்து பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த ஒரு நிலையில் அனைவருக்கும் மீண்டும் ஓர் அதிர்ச்சி தரும் விஷயமாக கொரானாவின் இரண்டாவது அலை ஜூலை மாத கடைசியில் அல்லது ஆகஸ்ட் மாதம் மழை காலத்தில் மீண்டும் தாக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம், தாத்ரி நகரத்தில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் கணிதவியல்துறை பேராசிரியர் சமித் பட்டாச்சாரியா குறிப்பிடும் போது,

ஒவ்வொரு நாளும் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இனி வரக்கூடிய காலகட்டத்தில் மெல்ல மெல்லச் தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் அதே வேகத்தில் மீண்டும் கொரோனவின் இரண்டாவது அலை மழைக்காலத்தில் வர வாய்ப்பு உண்டு. 

அப்போது நாம் கட்டாயம் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தே ஆக வேண்டும். நாம் எந்த அளவுக்கு சமூக விலைகளை கடைபிடிக்கிறோமோ அந்த அளவுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாமல் கட்டுப்படுத்த முடியும். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தாலும் ஒரு சில பகுதிகளில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இப்படி ஒரு தருணத்தில் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடக்கக் கூடிய சில நிகழ்வுகளையும் நாம் உற்றுக் கவனிக்க வேண்டும்.

அதாவது ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் கூட மீண்டும் அதே வைரசால் பாதிக்கப்பட்ட ஒரு நிகழ்வை பார்க்க முடிகிறது. இரண்டாவது முறையாக நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்கள் போதுமான எதிர்ப்பு சக்தி பெற்றிருப்பார்கள் என கூறவும் முடியாது. அதே போன்று ஒரு முறை கொரோனா தாக்கி விட்டால் மீண்டும் அவர்களுக்கு தாக்காது என எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

இந்த ஒரு காலகட்டத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அதாவது இதற்கான உரிய தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் வரையில் இதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும். அப்போது எந்த பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறதோ அந்த குறிப்பிட்ட பகுதியில் சமூக விலகல் கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். இதில் மிக முக்கியமான ஒன்று, மழைக்காலத்தில் பொதுவாகவே சளி காய்ச்சல் இருமல் வருவது சாதாரணமாக பார்க்கப்படும். இதுபோன்ற தருணத்தில் கிளைமேட் சேஞ்ச் என நமக்கு நாமே சொல்லிக் கொண்டு சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. அது கொரோனாவாக கூட இருக்கலாம். எனவே மருத்துவரை அணுகி, சோதனை செய்து, அதற்கான உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது என தெரிவித்துள்ளார் 

click me!