உங்களுடன் இருப்பவர்களின் "கண்களை" பார்த்து பழகுங்கள்...அவர்கள் யார் என்பது உங்களுக்கே புரியும்  

First Published Sep 16, 2017, 12:44 PM IST
Highlights
we can understand ones character by seing their eyes itself


உங்களுடன் இருப்பவர்களின் "கண்களை" பார்த்து பழகுங்கள்...அவர்கள் யார் என்பது உங்களுக்கே புரியும்   

 கண்  பேசும் வார்த்தையை புரிந்துக்கொள்வது என்பது  உண்மையில் ஒரு விதமான  திறமை  என்றே சொல்லாம். அண்ட வகையில் கீழே  கொடுக்கப்பட்டுள்ள  சில  அறிகுறிகள்  வைத்து, மற்றவர்களின்  கண்கள்  என்ன  சொல்கிறது என்பதை  மிக எளிதில் புரிந்துக்கொள்ளலாம்.அது  என்ன  என்பதை  பார்க்கலாம்.

1.கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது.

2) கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது.

3). கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது.

4). கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது.

5). கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது,

ஆசைப்படுகிறது.

6). கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது.

7). கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது.

8). கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது.

9). கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.

10). கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது.

11). கண்கள் மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது.

12). கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.

13). கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்.

14). கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல்.

15). கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது

16). கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது.

17). கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது.

18). கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது.

19). கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால்  எதையோ தேடுகிறது.

20). கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது.

21). கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது.

22). கண்களை கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது.

23). கண்களை கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது.

24). கண்கள் மூடித்திறந்தால் வெறுக்கிறது.

25). கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது.

26). கண் புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை.

27). கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்.

28). ஒரு கண் திறந்திருந்தால் சேட்டை.

29). இரண்டு கண்களும் மூடி இருந்தால் தூக்கம்.

30). கண்கள் திறக்கவில்லையென்றால் மரணம்.

சிறு சிறு விஷியங்கள் தான்.ஆனால் நம்  வாய்  பொய்  சொன்னாலும், நம் கண்கள்  பொய்  சொல்லாது என்பதற்கு  இதுவே எடுத்துகாட்டு 

 

 

 

 

click me!