
டிஜிட்டல் மீடியா நூலகம்....
இணையதளத்தில் இயங்கும் நூலகங்களின் வியக்கத்தக்கது டிஜிட்டல் மீடியா உலகம். இது உலக சரித்திர பதிவுகளை டிஜிட்டல் மீடியாவில் பதிவிட்டு வருகிறது . நம் வீட்டில் நமது தாத்தா ,முன்னோர்களின் பழைய போட்டோக்களை பார்க்கும்போது அப்போதே டிஜிட்டல் மீடியா இருந்திருந்தால் சேதம் இல்லாமல் இருந்திருக்கும் என தோன்றுகிறது.
பின் அதை அப்படியாவது சரிசெய்து,ஸ்கேன் செய்து நம் கம்ப்யூட்டரில் போட்டுவைக்கிறோம்.
அதே போல உலகில் நம் நினைவிற்கு சிக்காத நாட்களிலிருந்து கிடைத்த ஓவியம்,கலைகள் , எல்லாவற்றையும் அறிய முடிகிறது .அது மட்டும் இல்லாமல் நம் முன்னோர்கள் பற்றியும் நம்மால் அறிய முடிகிறது .நம் நாட்டில் உள்ள மாமனிதர்களை பற்றியும் , பண்டைய கால வீரர்கள் பற்றியும், மூலிகை மருத்துவம் , இந்த நவீன காலத்தில் குணப்படுத்த முடியாத நோய்க்கும் கூட பண்டைய காலத்தில் மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது . இந்த தளத்தில் உலா வருவதற்கும் பல வழிகள் , பிரிவுகள் உள்ளன . இடம் ,காலம் , பொருள் ,பொருள்வகை அமைப்பு ,நிறுவனங்கள் என உலா வரலாம் .
ஆங்கிலம் மட்டுமின்றி வேறு பல மொழிகள் மூலமும் தேடலாம் . சிறிய திரைப்பட வீடியோக்கள் ,ஓளிப்பதிவுகள் ,புகைப்படங்கள் வாரியாகவும் தேடி தகவல்களை பெறலாம் . ஒருமுறை தேடி பார்க்க தொடங்கினால் நம் முன்னோருக்கு முன்னோரான ஒரு தாத்தாவை சந்தித்த சந்தோஷம் கிடைக்கிறது . 'தமிழ்' என்று போட்டு தேடிய போது, வெகு காலத்திற்கு முன் அட்டையில் தமிழ் பெயர் ,குறிப்புக்கள் அந்த காலத்தில் நமக்காக எழுதி வைத்த அந்த பெரியவர் எப்படி இருந்திருப்பார் என்று சுகமான கற்பனை ஓடுகிறது. அவசியம் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு தளம் இந்த உலக டிஜிட்டல் மீடியா இணைய தளம்.
இந்த முகவரி : http :// www .wdl .org /en /
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.